தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதின்  மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

Continues below advertisement

சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் பிரசாந்த் பாண்டியராஜ் மேற்கொண்டுள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் இணைந்து, கதைக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் வழங்குகின்றனர்.

‘வாரண்ட்’ தொடர், அன்றாட போலீஸ் வழக்குகளின் கவனிக்கப்படாத உலகை ஆராய்கிறது, அவை மெதுவாக ஆபத்தான நிலைக்கு மாறும் விதத்தையும் காட்டுகிறது. இந்தக் கதை, கோட்டை கருப்புசாமி என்ற இரண்டாம் நிலை காவலரை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவரின் அமைதியான அவமானங்களும் பயமும், அவர் சட்டத்தை எவ்வாறு அமல்படுத்துகிறார் என்பதைக் கட்டமைக்கின்றன. இதன் மூலம் அதிகாரம், ஆட்சித்தன்மை மற்றும் நீதி எப்போது மங்குகிறது என்பதைக் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

Continues below advertisement

இந்த தொடரின் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ் கூறியதாவது:“கோட்டை கருப்புசாமி என்பது பாராட்டப்பட வேண்டிய ஹீரோ அல்ல. அவர் சிரமமானவர், நெகிழ்வானவர், மிகுந்த மனிதத் தன்மை கொண்டவர். அந்த நேர்மை என்னை பயமுறுத்தியது, அதனால்தான் நான் அந்தக் கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன். ஒரு படைப்பாளியாக, வெளிப்படையான காட்சிகளுக்கு பதிலாக உண்மையை நான் எப்போதும் விரும்புகிறேன். ‘வாரண்ட்’ தொடரில் நடித்தது, நான் பொதுவாக கேமராவின் பின்னால் மட்டும் ஆராயும் உணர்வுகளை நேரடியாக எதிர்கொள்ள வைத்தது. தமிழ் ZEE5 இந்தக் கதைக்கு அதன் இயல்பான, நேர்மையான வடிவத்தில் வெளிப்பட இடமளித்தது. பார்வையாளர்கள் கோட்டை கருப்புசாமியின் பயணத்தை வெறும் பார்ப்பதற்காக அல்ல, அதை உணரவும், சிந்திக்கவும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.”

மே 22 முதல் தமிழ் ZEE5-ல் ‘வாரண்ட்’ தொடரைப் பார்க்க தயாராக இருங்கள்.