தமிழ் தொலைக்காட்சிகளில் பாட்டு போட்டிகளுக்கான ரியாலிட்டி ஷோ வெவ்வேறு சேனல்களில் வெவ்வேறு பெயர்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அடுத்த இடத்தில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி. 


இறுதிக் கட்டத்தை நெருங்கிய சரிகமப நிகழ்ச்சி :


வெற்றிகரமாக இரண்டு சீசன்கள் முடிவடைந்த பிறகு சரிகமப நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  தற்போது அக்ஷயா,  லக்ஷனா, ஜீவன் மற்றும் புருஷோத்தமன் அகிய நான்கு பேர் பைனலிஸ்ட்டாக தேர்வாகியுள்ளார். 


 



நாகர்ஜுனா குடும்ப சூழ்நிலை :


இந்த நிகழ்ச்சியில் தனது குடும்ப சூழ்நிலையையும் மீறி இசை மீது இருந்த ஆர்வத்தால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நாகர்ஜுனா. ராமநாதபுரம் மாவட்டம் மீனவ குடும்பத்தை சேர்ந்த நாகர்ஜுனா எந்த ஒரு பயிற்சியையும் எடுத்துக்கொள்ளாமல் தனது திறமை ஒன்றை மட்டுமே நம்பி இந்த போட்டியில் பங்கேற்று இனிமையான குரலால் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டார். அவர் 6ம் வகுப்பு படிக்கும் போது மீன் பிடிக்க சென்ற அவர் தந்தை வீடு திரும்பவில்லை. எப்படியோ பெரும்பாடு பட்டு 10ம் வகுப்பு வரை பிடித்துவிட்டார். பின்னர் குடும்ப வறுமை காரணமாக மீன் பிடிக்கும் வேலையை செய்து தனது இரண்டு அக்காவுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். மீன் பிடிக்கும் போது பாடுவதை வழக்கமாக கொண்டவர். நாகர்ஜுனா பாடகர் ஆக வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை இப்போது நிறைவேற்றுவதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சரியான நேரத்தில் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயமாக ஜெயிப்பேன் என்று முழு நம்பிக்கையுடன் உள்ளார். நாகர்ஜுனாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவரின் ஹோம் டூர் மற்றும் குடும்பம் குறித்து வெளியான வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது.