தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். நேற்றைய எபிசோடில் சுபத்ரா குடும்பத்தில் கோவிலுக்கு சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

விஷாலை அறைந்த சுப்ரதா:

அதாவது கோயிலுக்கு வந்த பானுமதி ஸ்ரீஜா கர்ப்பமாகாமல் இருக்க மாத்திரை வாங்கி விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு சுப்ரதா அதிர்ச்சி அடைகிறாள். மேலும் இதற்கு காரணம் விஷால் தான் எனவும் சொல்ல சுபத்ரா பேரதிர்ச்சி அடைகிறாள். 

ராகவ் மற்றும் இசை ஆகியோர் இதை நம்ப மறுக்க சுபத்ரா விஷாலிடம் விசாரிக்க விஷால் உண்மைதான் என ஒப்புக்கொள்ள அனைவரும் ஷாக் ஆகின்றனர். பிறகு சுபத்ரா விஷாலை கோபத்தில் அறைந்து விட்டு அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி வருகிறாள். 

Continues below advertisement

டாக்டரிடம் கேட்கும் சுபத்ரா:

வீட்டுக்கு வந்த அவளிடம் இசை மற்றும் ராகவ் என இருவரும் விஷால் மீது நம்பிக்கை இருப்பதாக சொல்கின்றனர். ஆனால் சுபத்ரா டாக்டருக்கு போன் போட்டு நீங்க செக் பண்ணீங்களா என்று கேட்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.