ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் டூப்ளிகேட் மாப்பிள்ளையின் அப்பா அம்மாவை தீபா வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் கார்த்திக் தாலியை எடுத்து வந்து டூப்ளிகேட் அப்பா அம்மாவிடம் நீங்க உண்மையான புருஷன் பொண்டாட்டி தானே, அப்படினா அவங்க கழுத்துல தாலி காட்டுங்க என்று சொல்லி கொடுக்க இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஒருவரை ஒருவர் இப்படி ஒரு விஷயம் நடந்தால் குடும்பத்தில் எப்படியெல்லாம் பிரச்சனை வெடிக்கும் என நினைத்து பார்க்கின்றனர். ஐஸ்வர்யா இந்த பிரச்சனையில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என திட்டம் போட்டு மேலே இருக்கும் சாண்ட் லைட்டை அறுந்து கீழே விழ வைக்க கடைசியில் அது ஐஸ்வர்யா மேலயே விழுந்து அவள் மயங்கி விழ நட்சத்திரா இவர்களை தப்பி செல்ல சொல்கிறாள்.
லைட் எப்படி அறுந்து விழுந்தது என்ற சந்தேகம் கார்த்திக் மற்றும் அபிராமி என இருவருக்குமே உருவாகிறது, அடுத்ததாக தீபா முருகன் சிலை முன்பு நின்று எனக்கு மட்டும் ஏன் இப்படி தொடர்ந்து பிரச்னையா வந்துட்டே இருக்கு என்று வேண்ட கார்த்திக் அங்கு வந்து அவளுக்கு ஆறுதல் சொல்வதோடு லைட் அறுந்து விழுந்தது எதார்த்தமான விஷயமா தெரியல என்று சொல்கிறான்.
அடுத்ததாக கதிர் நட்சத்திராவுக்கு போன் செய்து உடனடியா ஒரு இடத்திற்கு வர வைக்க கடைசியில் கதிர் கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் செய்து வைத்திருப்பது தெரிய வருகிறது. நட்சத்திரா கல்யாணத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.