ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் துர்கா நவீனை சாமுண்டீஸ்வரி வெளியே துரத்த இருவரும் கோவிலில் காத்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி:

கோயிலில் இவர்களைப் பார்த்த பரமேஸ்வரி பாட்டி நீங்க எதுக்கு இங்க இருக்கணும்? வாங்க என் வீட்டிற்கு போகலாம் என்று சொல்லி அழைத்து கொண்டு கிளம்புகிறாள். ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்கிறாள்.

சந்திரகலா இந்த விஷயம் அறிந்து அதை சாமுண்டீஸ்வரிக்கு தெரியப்படுத்த அவள் துர்காவின் துணிகளை தூக்கி வீசி இனி அவ எனக்கு பொண்ணே இல்ல என்று ஆவேசப்படுகிறாள். 

கான்ஸ்டபிளை கொல்ல காளியம்மாள் ஸ்கெட்ச்:

மறுபக்கம் காளியம்மா சொன்ன அறிவுரைப்படி சிவனாண்டி முத்துவேல் ஆகியோர் ஒரு ஆள் ஏற்பாடு செய்து நர்ஸ் கெட்டப்பில் அனுப்பி கான்ஸ்டபிளை கொல்ல சதிவேலை நடக்கிறது. கார்த்திக்கு சந்தேகம் வந்து உள்ளே செல்ல அவர் ஆக்சிசன் மாஸ்க் நீக்கப்பட்டிருப்பதை கவனிக்கிறான். 

அந்த கான்ஸ்டபிள் செல்போன் செல்போன் என்று சொல்லி மயங்குகிறார். அடுத்து டாக்டர் பரமேஸ்வரி பாட்டி கார்த்தியிடம் கான்ஸ்டபிள் இறந்து விட்டதாக சொல்ல இருந்த ஒரு ஆதாரமும் போச்சே என்று வருத்தமடைகிறார் பரமேஸ்வரி. 

செல்போனில் இருப்பது என்ன?

ஆனால் கார்த்திக் பயப்படாதீங்க பாட்டி அவர் ஏதோ செல்போன் செல்போன்-னு சொல்லிட்டே இருந்தாரு, அவருடைய செல்போனில் ஏதோ ஆதாரம் இருக்கு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.