தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சண்டே ஸ்பெஷல் எபிசோடில் கார்த்திக் சிலம்பாட்டத்தில் தூள் கிளப்பிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

ஒத்தடம் கொடுக்கும் காளியம்மாள்:

அதாவது, ரேவதி தனது திருமண போட்டோவை வைத்து இரண்டு பேரும் கூடிய சீக்கிரம் ஒன்று சேர வேண்டும் என்று கண்கலங்கி பேசிக் கொண்டிருக்க, இதை சந்திரகலா கவனிக்கிறாள். 

Continues below advertisement

மறுபக்கம், சிலம்பாட்டத்தில் அடி வாங்கியவனுக்கு ஒத்தடம் கொடுத்து ஆறுதல் சொல்கிறாள் காளியம்மா. அந்த சாமுண்டீஸ்வரி, கார்த்தியை இப்படியே விடக்கூடாது, பெருசா ஏதாவது பண்ணனும் என யோசிக்கின்றனர். 

சாமு்ண்டீஸ்வரியை வாழ்த்திய ஊர் மக்கள்:

பிறகு கார்த்திக் வீட்டுக்கு வர வீட்டில் இருக்கும் பையில் பணம் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறான். இதற்கு பின்னாடி ஏதோ திட்டம் இருக்கு என்பதை கார்த்திக் புரிந்து கொண்டு ஊர் காரர்களை வர சொல்கிறான். நீங்கதான் வர சொன்னதற்காக சொல்லு சாமுண்டீஸ்வரி குழப்பம் அடைய, கார்த்திக் பொங்கலுக்கு காசு கொடுக்க வர சொன்னிங்களே என்று சொல்கிறான். 

மேலும் அந்த பணத்தைப் பிரித்து எல்லோருக்கும் கொடுக்க எல்லோரும் சாமுண்டீஸ்வரியை வாழ்த்தி விட்டு செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.