தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Continues below advertisement

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இளையராஜா பரமேஸ்வரியை திருப்பதியில் சந்தித்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சந்திரகலா வாதம்:

அதாவது, கார்த்திக் பரமேஸ்வரியை ஊருக்கு அழைத்து வர சொல்கிறான். இந்த விஷயம் அறிந்த சிவனாண்டி, முத்துவேல் "ஊருக்குள்ள யாரும் புதுசா வரக்கூடாது. அப்படி யாராவது வந்தால் எல்லையிலேயே வச்சு அவங்களை தூக்குங்க" என ஆர்டர் போடுகிறார்கள். 

Continues below advertisement

அதன் பிறகு இளையராஜா மற்றும் பரமேஸ்வரி வர கார்த்திக் அவர்களை வேறு வழியில் அழைத்துச் சென்று சாமுண்டீஸ்வரி வீட்டில் நடக்கும் உண்மைகளையும் சொல்ல வைக்கிறான். உண்மையைக் கேட்ட தமிழ், ஈஸ்வரி அதிர்ச்சியாக சந்திரகலா நீ சொல்றது பொய்யென வாதம் செய்கிறாள். 

நம்ப மறுக்கும் சாமுண்டீஸ்வரி:

ஆனால், சாமுண்டீஸ்வரி இந்த விஷயத்தால் நான் யாரையும் நம்ப தயாராக இல்லை எதுவாக இருந்தாலும் பஞ்சாயத்தில் பேசிக்கொள்ளலாம் என பஞ்சாயத்தை கூட்ட சொல்கிறாள். பரமேஸ்வரியும் பஞ்சாயத்தில் உண்மையை சொல்வதாக சொல்ல முத்துவேலுக்கு சிக்கல் உருவாகிறது.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.