தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
காதல் பரிசு:
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதிக்காக சவால் ஒன்றை விடுத்து சாமுண்டீஸ்வரி கையால் புது துணியை வாங்கிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரேவதி கார்த்திக்காக ஒரு கிப்ட் கொடுக்க ஆசைப்பட்டு ஹார்டின் வடிவத்தில் ஒரு பொருளை வாங்கி ஒரு பக்கம் கார்த்தியின் பெயரையும் மறுபக்கம் அவளது பெயரையும் எழுதி அதை பரிசாக கொடுக்க தயாராகிறாள்.
கிஃப்டை உடைத்து வீசிய சந்திரகலா:
இதற்காக கார்த்தியை தனியாக வர வைக்க இரவு 10 மணிக்கு தோட்டத்தில் என்னை சந்திக்கவும் பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்று சொல்லி கடிதத்தை தூக்கி வீச அது அனைவரது கையிலும் கிடைக்கிறது. கடைசியில் சந்திரகலா ரேவதி கார்த்திக்கு கிப்ட் கொடுக்க போகும் சமயத்தில், அதை பிடித்து தூக்கி வீசி உடைத்து விடுகிறாள்.
இதனால் ரேவதி வருத்தமடைய சந்திரகலாவுக்கு பேய் பயத்தை காட்டி ஓட விட முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.