தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம்.
அம்மாவிடம் ஆதங்கம்:
நேற்றைய எபிசோடில் கார்த்திக் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் பல பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. இதனைத் தொடர்ந்து இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் உணர்ச்சியும் பரபரப்பும் கலந்த காட்சிகள் ரசிகர்களை காத்திருக்கின்றன.
அதாவது, ரேவதி நேரடியாக சாமுண்டீஸ்வரியை சந்தித்து, கார்த்திகை பற்றி தவறாக புரிந்துகொண்டு ஏன் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்தீர்கள் என கடும் கோபத்துடன் கேள்வி எழுப்புகிறாள். சாமுண்டீஸ்வரியின் செயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக்காட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ரேவதி, அதிரடியான வார்த்தைகளால் அவரை திணற வைக்கிறாள்.
இதையடுத்து, தலையில் காயம் அடைந்திருக்கும் ரேவதியை கார்த்திக் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்கிறான். மனைவியின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளும் கார்த்திக்கின் அக்கறை இந்த எபிசோடில் மனதை நெகிழ வைக்கிறது. சிகிச்சை முடிந்த பிறகு இருவரும் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு திரும்புகின்றனர்.
சிவனாண்டி - சந்திரகலா திட்டம்:
மறுபக்கம், கார்த்திக் வெளியே வந்திருப்பது குறித்து சிவனாண்டியும் சந்திரகலாவும் தீவிரமாக ஆலோசனை நடத்துகின்றனர். கார்த்திக்கிற்கு எதிராக அடுத்ததாக என்ன செய்யலாம்? அவரை மீண்டும் எப்படி சிக்கலில் மாட்ட வைக்கலாம்? என்று திட்டமிடும் இருவரின் பேச்சு கதைக்களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையில், நடந்த சம்பவங்களால் மனவேதனையில் இருக்கும் ரேவதி வீட்டில் சாப்பிடாமல் தனியாக படுத்துக் கொள்கிறாள். இதை கவனிக்கும் கார்த்திக், அவளுக்காக உணவு எடுத்துச் சென்று அன்பாக பேசி சமாதானப்படுத்துகிறான். கணவரின் அக்கறை மற்றும் ஆறுதல் வார்த்தைகளால் மனம் உருகும் ரேவதி, இறுதியில் சாப்பிட சம்மதிக்கிறாள். இந்த உணர்ச்சிகரமான காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி?
ரேவதியின் கோபம் சாமுண்டீஸ்வரியின் மனதை மாற்றுமா? சிவனாண்டி மற்றும் சந்திரகலாவின் அடுத்த திட்டம் என்ன? கார்த்திக் மற்றும் ரேவதியின் வாழ்க்கையில் அடுத்ததாக என்ன திருப்பம் காத்திருக்கிறது? என்ற பல கேள்விகளுக்கான பதில்களை அறிய, இன்று இரவு 9 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரை காணத் தவறாதீர்கள்.
