ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கார்த்திகை தீபம்' சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆர்த்திகா. மிகவும் குடும்ப பாங்கான அவரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளார்.
ஆர்த்திகா காதல்:
கார்த்திக் ராஜ் - ஆர்த்திகா ரீல் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தான் நடிகை ஆர்த்திகாவுக்கு காதல் திருமணம் நடைபெற்றது. ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த காதலரை கரம் பிடித்த ஆர்த்திகாவின் லவ் ஸ்டோரி பற்றி எந்த ஒரு இடத்திலும் எந்த தகவலும் இல்லை.
காதல் வந்தது எப்படி?
அந்த வகையில் சமீபத்தில் தனது காதல் கணவருடன் ஆர்த்திகா நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது அவர்களின் காதல் கதை குறித்து பேசியிருந்தார். அவர் பேசுகையில் அவங்க கண்ணூர் என்னுடைய ஊர் கோட்டயம். அவர் இன்டீரியர் டிசைனிங் கோர்ஸ் படிப்பதற்காக கொச்சின் வருவார். நான் அங்கே தான் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போ அவர் அடிக்கடி கடைக்கு வந்து போகும் போது எங்க இரண்டு பேருக்கும் இடையில் நட்பு வந்துச்சு.
நாங்க ஃப்ரெண்ட்ஸா இருக்கும் போது அவர் என்கிட்ட அடிக்கடி எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சு இருக்கு. நான் ப்ரொபோஸ் பண்ண போறேன் அப்படினு விளையாடுவார். அப்போ எனக்கு எதுவும் தோணல. ஒரு நாள் ஏப்ரல் பூல் அன்னிக்கு இப்படி சொல்லிட்டு எனக்கு வாட்ஸ் அப்பில் பெரிய ஆடியோ ஒன்னு ரெகார்ட் பண்ணி அனுப்பி இருந்தாரு.
ப்ரெண்டா இருக்கும் போதே ரொம்ப பாவமா, அமைதியா தான் இருப்பார். எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருப்பார். என்னை மாதிரி படபடவென பேசுற ஆளுக்கு இந்த மாதிரி அமைதியா இருக்குற ஒருத்தர் லைஃப் பார்ட்னரா இருந்தா தான் கரெக்டா இருக்கும் என தோணுச்சு. அப்ப தான் எனக்கு ஒரு ஸ்பார்க் வந்துது. ஓப்பனா சொல்லனும்னா எனக்கே பையனை ரொம்ப புடிச்சு இருந்துது. லவ் இருந்தாலும் சொல்லவே இல்லை. எல்லாமே நானே தான் கண்டுபிடிச்சு சொன்னது. அமைதியா இருக்குறதால நல்ல பிள்ளை என நினைச்சுக்காதீங்க. கேடி பையன்.
எதிர்ப்பு:
நான் கிறிஸ்டியன் அவர் ஹிந்து. அதனால எங்க பேமிலி சைட்ல நிறைய எதிர்ப்பு இருந்துது. குடும்பத்தோட சப்போர்ட் இல்லாம கல்யாணம் பண்ணிக்க கூடாது என உறுதியா இருந்தோம். அதற்கு அப்புறம் பல பிரச்சினை சிக்கல் எல்லாத்தையும் சமாளிச்சு பேமிலி சம்மதம் சொன்னதுக்கு பிறகு தான் எங்க கல்யாணம் நடந்துச்சு.
இவ்வாறு அவர் கூறினார்.