தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் காளியம்மா, சிவனாண்டி முத்துவேல் ஆகியோர் வெயிலில் இருந்து வெளியே வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திக்கிற்கு சவால் விட்ட காளியம்மாள்:
அதாவது, வெளியே வந்த காளியம்மா கார்த்திக்கு போன் செய்து நாங்க வெளியே வந்துட்டோம் பாரு.. உன்னால ஒன்னும் செய்ய முடியாது என சவால் விடுகின்றனர்.
பதிலடி தந்த கார்த்திக்:
பிறகு இவர்கள் செல்லும் இடமெல்லாம் பாம் சவுண்ட் கேட்டுக் கொண்டே இருக்க பயந்து போய் போலீசுக்கு சென்று நாங்கதான் பாம் வைப்போம் என்ற உண்மையை ஒத்துக் கொண்டு ஜெயிலுக்குள் சென்று விடுகின்றனர்.
பிறகு கார்த்திக் அவர்களை சந்தித்து என்ன திரும்பவும் ஜெயிலுக்கு போய்ட்டீங்க போல என்று பதிலடி கொடுக்கிறான். பிறகு காளியம்மா சந்திரகலாவை கூப்பிட்டு ரகசியமாக ஒரு விஷயத்தை சொல்கிறாள்.
அடுத்து நடப்பது என்ன?
இதை தொடர்ந்து சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்துக்கு வந்து இனிமே கார்த்திக் வரமாட்டாரு எல்லாத்தையும் என்கிட்ட தான் பேசணும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.