தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. வாரத்தில் ஏழு நாட்களும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி கோபமாக இருக்க சண்முகம் தர்மகத்தா தேர்தலில் நிற்க மாட்டேன் போதுமா என்று சொன்னதன் பழையபடி மீண்டும் சண்முகத்துடன் ஒட்டிக் கொண்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது சண்முகம் பரணியை கிளினிக்கில் விட்டு விட்டு வேலைகளை பார்த்துவிட்டு கிளம்பும்போது வழியில் வைகுண்டத்துடன் தாயத்து வாங்க போயிருந்த ரமேஷை பார்க்க அவன் விரும்பி கொண்டிருக்க சண்முகம் என்னாச்சு என்று கேட்கிறான். ரெண்டு நாளா உடம்பு சரியில்லை ஒரே இருமல் என்று சொன்னது சண்முகம் என் பொண்டாட்டி டாக்டரா இருக்கும்போது இந்த ஊர்ல பேஷண்ட் இருக்கலாமா என்று கிளினிக்கிற்கு அழைத்துச் செல்கிறான்.


இரவு நேரம் என்பதால் பரணி கிளினிக்கை முடித்து வீட்டிற்கு கிளம்ப சண்முகம் இவனை கூட்டி வந்ததும் நாளைக்கு பார்த்துக்கலாம் என்று சொல்ல உன்னை நம்பி வந்திருக்கவருக்கு டிரீட்மென்ட் பாரு என்று சொன்னது பரணியும் சண்முகத்தின் வார்த்தையை ஏற்றுக் கொண்டு சரி முகத்தை அலம்பிட்டு வரேன் என்று உள்ளே சொல்கிறாள்.


இருவரும் அன்னோன்யமாக இருப்பதை பார்த்த ரமேஷ் என்னப்பா சந்தோசமா இருக்கீங்க போல என்று கேட்க ஆமா என்னன்னு தெரியல திடீர்னு ரொம்ப பாசமா இருக்கா என்று சொன்னதும் அதெல்லாம் தாயத்து செய்த வேலை என்று நடந்த விஷயத்தை சொல்ல இதைக் கேட்டுவிடும் பரணி தாயத்தை கழட்டி சண்முகத்தின் முகத்தில் எறிகிறாள்.திரும்பவும் என்னை ஏமாத்திட்டல இருக்கிற 45 நாள்ல 5 நாளை கழிச்சுகிறேன். இன்னும் 40 நாள்ல இந்த வீட்டை விட்டு கிளம்பிடுவேன் என்று அதிர்ச்சி கொடுத்து பழையபடி சண்முகத்திடம் வெறுப்பை காட்ட தொடங்குகிறாள்.


அதோடு இல்லாமல் வீட்டுக்கு வந்த பரணி இவ்வளவு நாள் சண்முகம் மேல மட்டும் தான் எனக்கு கோபம் இருந்தது ஆனால் நீங்களும் அவனோடு சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்க என்று தங்கைகளிடமும் ஆவேசப்பட்டு பேசுகிறாள்.அதன் பிறகு சண்முகம் வைகுண்டத்துடன் சென்று ஏன்பா இப்படி பண்ண நான் தான் இதை பாத்துக்குறேன்னு சொன்னேனே என்று கோபப்பட நீயும் ஐம்பது நாளா ஒன்னும் பண்ணல அதனாலதான் நான் ஒரு மந்திரவாதி போய் பார்த்தேன் என்று சொல்கிறார்.


மேலும் நடந்தது நடந்து போச்சு இருக்கிற 40 நாளில் அவ மனச மாத்த பாரு என்று சொல்ல தங்கைகள் 40 நாளில் எப்படி முடியும் ரொம்ப கஷ்டம் தான் என்று சொல்ல நான் அவளோட மனசை மாத்தி காட்டுறேன் என சண்முகம் சபதம் எடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.