ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பழனி அன்னத்தின் மீது திருட்டு பழி போட பிளான் போட்டு நகையை எடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அன்னலட்சுமி பீரோ இருக்கும் ரூமில் வீட்டை பெருக்கி கொண்டிருக்க, பீரோவில் சாவி இருக்க வீட்டு ஓனர் சாவியை மறந்துட்டோமோ என நினைத்து வந்து பார்த்தவர் சாவி பீரோவில் இருப்பதை பார்த்து நகர்கிறார்.அன்னலட்சுமி எல்லா வேலையும் முடித்து விட்டேன் என சொல்லி பையை எடுத்து கொண்டு கிளம்புகிறாள்.
பழனியும் அவரது நண்பர் லிங்கமும் மீண்டும் வந்து புதியதாக வாங்கிய நகையை காட்டி உன் பொண்டாட்டி நகையை எடுத்துட்டு வா அதே மாடலான்னு பார்த்துருவோம் என சொல்ல பழனியின் நண்பர் பீரோவை திறந்து பார்க்க அதில் நகை இல்லாமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார். பழனி பழனி என பழனியை கூப்பிட, நகை காணாமல் போன விஷயத்தை சொல்கிறார். பழனி அவரிடம் நாங்க போனதுக்கப்புறம் யாராவது வீட்டுக்கு வந்தாங்களா என கேக்க, அவர் யோசித்து விட்டு சாவி பீரோவிலேயே இருந்துச்சு, அப்போது வேலைக்கார அம்மா மட்டும் இருந்தாங்க என சொல்ல, பழனி அந்த அம்மா தான் நகையை திருடியிருக்கும் என சொல்கிறான்.
அன்னலட்சுமி வீட்டுக்கு வர வடிவேலு அன்னலட்சுமியிடம் பணம் கேட்க, அன்னலட்சுமி அவனை திட்ட வடிவேலு யோசனையுடன் அன்னலட்சுமி கொண்டு பையில் ஏதாவது பணம் இருக்கும் என யோசனையுடன் பையை திறக்க உள்ளே நகை இருப்பதை பார்க்கிறான். உடனே அந்த நகையை எடுத்து கொண்டு நகர்கிறான்.
அடுத்து பழனி போலீசை அழைத்துக் கொண்டு செந்தில் வீட்டிற்கு வர போலீஸ் அமுதாவிடம் இவரோட வீட்டுல தான் அந்த அம்மா வேலை பார்க்குறாங்க, அந்த வீட்டுல நகையை காணோம், நீங்க தான் எடுத்துருக்கீங்கன்னு ஹவுஸ் ஓனர் சொல்வதாக சொல்ல கான்ஸ்டபிஸ் அன்னலட்சுமி பையை செக் பண்ணுகிறார். அதில் துணியில் சுற்றி வைக்கப்பட்ட நகைகள்இருக்க அனைவரும் ஷாக் ஆகின்றனர்.
வீட்டு ஓனரிடம் இது உங்க நகையா பாருங்க என சொல்ல, இது என் நகை தான் என சொல்கிறார். மேலும் இன்னொரு நகை இல்ல என சொல்ல, இன்ஸ்பெக்டர் அன்னமிடம் அதுக்குள்ள வித்துட்டீங்களா என கேட்க அன்னம் தனக்கு தெரியாது என சொல்கிறாள். பழனி இன்ஸ்பெக்டரிடம் இவங்க என் சொந்தக்காரங்க தான் ஒரு தடவை மன்னிச்சி விட்டுருங்க என சொல்ல அமுதா பழனி தான் இதை செஞ்சிருப்பாரு என சொல்லி இன்ஸ்பெக்டரிடம் நாளை காலைக்குள் நகையை தருவதாக சொல்கிறாள்.
மறுபக்கம் வடிவேலு அடகு கடையில் நகையை விற்று பணத்துடன் வெளியே வந்தவன் இதை வச்சு இன்னும் ஒரு மாசம் சந்தோஷமா இருக்கலாம் என நினைக்கிறான். மாயா அமுதாவிடம் தன்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது அதை குடுத்து பிரச்சனையை சரி செய்யலாம் என சொல்ல அமுதா வேண்டாம் என மறுத்து விட அன்னலட்சுமி என்னால தான் எல்லா பிரச்சனையும் என புலம்புகிறாள்.
பிறகு வடிவேலு தண்ணி அடித்துவிட்டு வந்து அன்னமிடம் நான் காசு கேட்டப்ப இல்லேன்னு சொல்லிட்டு நகையை திருடி வச்சிருக்க என சொல்லிவிட்டு நகர அமுதா அவன் இடுப்பில் சொருகியிருக்கும் பணத்தை பார்த்து விட்டு அவன் சட்டைப் பையை பார்க்க அதில் நகை கடை ரசீது இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சில் காண தவறாதீர்கள்.