ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் மலையாள சீரிஸ் "ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்" படப்பிடிப்பு துவங்கியது !!

Continues below advertisement

ZEE5 நிறுவனம் தனது அடுத்த அதிரடி இருமொழி (தமிழ் – மலையாளம்) ஒரிஜினல் சீரிஸான "ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்" ( “Once Upon A Time in Kayamkulam” )சீரிஸின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த சீரிஸ் புத்தாண்டை முன்னிட்டு ZEE5 தளத்தில் வெளியாக உள்ளது.

Rise East Production House தயாரிப்பில், அமீன் பாரிஃப் இயக்கத்தில் உருவாகும் இந்த சீரிஸ், முழுக்க மண் மணம் கமழும் ஹைஸ்ட் காமெடி (Heist Comedy) ஜானரில் உருவாகவுள்ளது. இந்த சீரிஸ் நகைச்சுவை, பரபரப்பான  திருப்பங்கள் மற்றும் இன்றைய OTT ரசிகர்களை கவரும் நவீன கதை சொல்லல் ஆகியவை இணைந்து, தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

Continues below advertisement

இந்த சீரிஸில் அன்புசெல்வன், சுபாஸ், ரமேஷ் மாதவன், வின்சு ரேச்சல், ராகேஷ் உசார், கௌதமி நாயர், சாவித்ரி, விஜய் சத்தியா, அருண், விக்னேஸ்வர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், "ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்"  தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ZEE5-இன் ஒரிஜினல் உள்ளடக்க வரிசையில் ஒரு புதுமையான, ரசிக்கத்தக்க படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.