நடிகர், எழுத்தாளர், இயக்குனர், என பல முகங்கள் இவருக்கு உண்டு. சின்னத்திரையில் 70-திற்கும் மேற்ப்பட்ட நாடகங்களிலும் வெள்ளித்திரையில் துணை நடிகராகவும் இரண்டு படங்களில் நடித்துவிட்டு ஆதியும் அந்தமும் என்ற படத்தை எழுதி இயக்கியிருந்தார் கெளசிக் நரசிம்மன்.
பள்ளிப்பருவ நாடங்களில் தொடங்கியது இவரின் நடிப்பின் பயணம். கெளசிக்கின் முதல் நாடகத்தில் இவருக்கு ஒப்பனை செய்தது நடிகர் பத்மினியின் மேக்-அப் ஆர்டிஸ்டாம். சிறுவயதில் நடித்த ஒளவையார் வேடம் கெளசிக்கின் சினிமா பயணத்திற்கு வித்தாக அமைந்ததாக கெளசிக் கூறினார். அப்போது தொடங்கியது இவரின் சினிமா கனவு. சினிமாவின் மீதுள்ள காதலினால் இவர் அமெரிக்காவில் பணிபுரியும் வாய்ப்பினையும் மறுத்தாராம்.
ஏ.வி.எம் தயாரிப்பில் கெளசிக் தனது முதல் மெகா சீரியலை நடித்தார். பிரபல டாக் ஷோ ஒன்றில் கெளசிக் கூறியதாவது, “சீரியல் நடிக்க வேண்டும் என்று நான் சீரியல் நடிக்கவில்லை என் நடிப்பின் முதல் கட்டத்தில் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் சினிமாவில் நடிப்பதற்கான ஓட்டம் மனதில் இருந்துகொண்டே இருந்தது. காலப்போக்கில் இரு படங்களில் கதாநாயகனாக நடித்தேன், பின் எனக்கு சிறிய ரோல்கள்தான் கிடைத்தது. நாடகங்களில் எவ்வளவு நாட்கள்தான் நடிப்பது என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். அதனால் இயக்குனராக என் பயணத்தை தொடங்கினேன்.
காலமாற்றத்திற்கு ஏற்றவாறு வெப் சீரீஸ் இயக்க ஆரம்பித்தேன்.14 கதைகளில் எனது முதல் கதையை தயாரிப்பாளர் தேர்ந்தெடுத்தார். அப்படியாக எனது முதல் வெப்சீரீஸ் மாயத்திரை வெளிவந்தது. Zee 5-யின் துணைத்தலைவரான கெளசிக் OTT வலைதளங்களில் வெளிவந்த முதலும் நீ முடிவும் நீ, வலிமை மற்றும் விலங்கு திரைப்படத்தை பற்றி பேசினார். மக்கள் இப்போது எதர்ச்சியான கதைகளத்தை எதிர்ப்பார்க்கிரார்கள், டெம்லேட் சினிமாவை பார்த்து ரசிகர்களுக்கு போர் அடித்து விட்டது. வெப் சீரீஸ் ஒரு மிகப் பெரிய உலகம், OTT பக்கத்தில் சப்ஸ்க்ரைபர்களை தக்க வைப்பது கடினமான ஒன்று. ஒரு படத்தை தயாரிக்க பல நபர்களின் உழைப்பு தேவைப்படுகிறது, அப்படியே அது வெளிவந்தால் பலரும் டெலிக்ராம் ஒன்றை கைவசம் வைத்துக்கொண்டு அதிலே படங்களை பார்த்து விடுகின்றனர்.ஒரு நிமிடம் கூட மக்களுக்கு சலிப்பு தட்டாத கண்டெண்டை கொடுப்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம், இல்லையென்றால் மக்கள் zee 5 நல்ல இல்ல அமேசான் வை என்று ஃப்லிப் ஆகிவிடுக்கின்றனர். இதனால் பொருளாதார ரீதியில் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் OTT ப்ளாட்ஃபார்ம் நிறுவனங்களில் துண்டு விழுவதே மிச்சம். ப்ரோமோஷனுகாக போஸ்டர் ஒட்டிய காசு கூடு வசூல் ஆகாமல் சில படங்களும் இருக்கிறது.
ஸ்கிரீன் ப்ளே ஒவ்வொறு ப்ளாட்ஃபார்வுக்கும் வேறுபடும், OTT-யில் மக்களின் சுவாரஸ்யத்தை தக்கவைக்க அதிகமாக மெனக்கெட வேண்டும் என்று கூறி தனது நேர்காணலை நிறைவு செய்தார் கெளசிக்.