தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான படலாசிரியரான யுகபாரதி, கிட்டத்தட்ட ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'ரன்' திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான யுகபாரதி ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். காதல் பிசாசு, பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், கையிலே ஆகாசம், எல்லு வய பூக்களையே,  மண்ணிலே ஈரமுண்டு உள்ளிட்ட பாடல்கள் அவரின் ஹிட் லிஸ்டில் அடங்கும். 


 



சமீபத்தில் ஒரு நேர்காணல் ஒன்றில் அவரின் ஸ்வாரஸ்யமான அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். “நீங்க எழுதின பாட்டு எனத் தெரியாமலேயே உங்களை உட்கார வைத்து யாராவது ஒருவர் உங்களைத் திட்டிய அனுபவம் ஏதாவது உள்ளதா?” என யுகபாரதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “என்னை நிறைய பேர் திட்டி இருக்காங்க. என்னை பலருக்கும் தெரியாது என்பதால் அவர்கள் திட்டுவதை பலமுறை ரசித்து இருக்கிறேன். 


நான் பேச்சுலராக இருக்கும் போது பக்கத்தில் ஒரு டீ கடை இருக்கும்.  தினமும் அந்த சேட்டா கடையில் போய் தான் பேப்பர் படிச்சுக்கிட்டு அங்கு இருக்கும் ஒரு ப்ரெண்ட்ஸ் குரூப்  உடன் அரட்டை அடித்துக் கொண்டு இருப்போம். அந்த ப்ரெண்ட்ஸ் குரூப்புக்கு நான் யார் என்பது தெரியும். அதே போல சேட்டாவுக்கும் என்னை பற்றி தெரியும். 


மன்மத ராசா மன்மத ராசா பாடல் வெளியான சமயம் அது. அந்தப் பாட்டை கேட்டுட்டு பாட்டு ரொம்ப பிரமாதம், பாட்டு சூப்பர் ஹிட் அப்படி இப்படின்னு என பாராட்டுனார். அவர் பேசி முடிக்குறதுக்குள்ளேயே ஒருத்தர் வந்து “தயவு செஞ்சு இந்தப் பாட்டை நிறுத்துயா. இதெல்லாம் ஒரு பாட்டு இதைப் போய் கடையில போட்டு வைச்சுருக்க” என்று சொல்லவும் சேட்டா சிரிச்கிட்டே சமாளிக்க முயற்சி பண்றாரு.


அவரும் சேட்டாவுக்கு கஸ்டமர் தான், நானும் ஒரு கஸ்டமர் தான். அதனால இது நல்ல பாட்டு தான் அப்படினு சேட்டா அவர் கிட்ட சொல்றாரு. ஒரு கட்டத்துல இரண்டு பேரும் சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க. இந்தப் பாட்டை நீ எப்படி கெட்ட பாட்டுன்னு சொல்லுவ அப்படினு சேட்டா எனக்காக பேசுறாரு. அப்ப கூட அவர் விடாம இந்தப் பாட்டை எழுதியவன் கூட இங்க தான் பக்கத்துல இருக்கான்னு கேள்விப்பட்டேன்.


அந்த ஆளு யாருனு எனக்கு ஒரு தடவை காட்டுயா அப்படினு சேட்டா கிட்ட சொல்லறாரு. அவரும் எதுவுமே முடியாம காட்டுறேன் காட்டுறேன் அப்படினு சொல்லிகிட்டே நல்ல பாட்டு பாட்டுன்னு சொல்லிகிட்டே பாட்டை கொஞ்சமா ஸ்லோ பண்ணிட்டாரு.


 




சேட்டா வந்து சண்டை போட்டவர் கிட்ட இவர் தான் அந்த பாட்டை எழுதினதுன்னு என்னை காட்டி சொல்லிட்டாரு. அப்புறம் ஒரு நாள் அந்த நபர் எனக்காக காத்துகிட்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் ரொம்ப பவ்யமா வந்து சார் தப்பா எடுத்துக்காதீங்க . சரியா நான் பாட்டோட லிரிக்ஸ் கேட்காமல் திட்டிட்டேன். ரொம்ப நல்ல பாட்டு சார் அது அப்படின்னு சொன்னாரு. அந்த அனுபவம் வந்து எனக்கு மறக்க முடியாதது” என யுகபாரதி  கூறியுள்ளார்.