தஞ்சையை பூர்வீகமாக கொண்ட கவிஞர் , திரைப்பாடலாசிரியர் யுகபாரதி. கவிதைகள் , கட்டுரைகள் என இலக்கிய துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞன். இவர் முதன் முதலில் எழுதிய பாடல் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘ பாடல். இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன நிலையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறார்.






அவமானப்படுத்தப்பட்ட யுகபாரதி :


இந்த சூழலில்தான் இயக்குநர் லிங்குசாமி , யுகபாரதியை அனுகியிருக்கிறார். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது . அதே போல நீங்கள் வேறு ஒரு பாடல் எழுத வேண்டும் என கூறி வித்யாசாகரிடம் அழைத்துச்சென்றிருக்கிறார். அப்போது வித்யாசாகரிடம் விருது பெற்ற இரண்டு கவிதை தொகுப்புகளை கொடுத்தாராம். அதனை இடது கையால் வாங்கி ஒரு மூலையில் தூக்கி போட்டதாக சொல்கிறார் யுகபாரதி. மேலும் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் தனக்கு தெரியாது என்பது போலவே நடந்துக்கொண்டாராம் வித்யாசாகர். அப்போது இவரா பாடலாசிரியர், காதல் கடிதம் கூட எடுத்துச்செல்ல தகுதியில்லாத ஆள் போல இருக்கிறார். இவரா காதல் கடிதம் கொடுப்பதற்கு ஏற்ற சூழலில் பாடல் எழுத போகிறார் என ஏளனம் செய்திருக்கிறார் வித்யாசாகர். உடனே லிங்குசாமி இவர் எனக்கு லக்கி சார்ம் சார் . அதனால இவரே எழுதட்டும் என்றாராம் . நமது திறமையை மதித்து அழைத்தார் என நினைத்தால் லக்கி என கூறுகிறாரே என வருத்தப்பட்டிருக்கிறார் யுகபாரதி.




வித்யாசாகர் - யுகபாரதி வாக்குவாதம் :


லவ் லெட்டர் கொடுப்பது போல ஸ்விட்சிவேஷன். ஆனால் அன்புள்ள என ஆரமிக்கக்கூடாது என வித்யாசாகர் சொல்ல , யுகபாரதி நிறைய வார்த்தைகளை முயற்சித்து பார்த்திருக்கிறார். எது சொன்னாலும் வித்யாசாகர் முரணாக பேசவே , இவரை மாற்றுங்கள் அல்லது என்னை மாற்றுங்கள் என வித்யாசாகர் முகத்திற்கு நேராகவே கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று , இரவு முழுவதும் யோசித்திருக்கிறார். அப்போது அழைத்த லிங்குசாமி அவர் காரணமில்லாமல் எதுவும் பேசமாட்டார் . சற்று யோசித்து பாருங்கள்! வித்தியாசமாக செய்யுங்கள் என்றாராம். அப்போது நண்பர் ஒருவர் யுகபாரதியை அழைக்கவே “எப்படி இருக்க ?” என கேட்க “ ஏதோ இருக்கிறேன் என கூறியிருக்கிறார். முதல் வரியை சித்தர் பாடலில் இருந்த வரிகள் மூலம் இன்ஸ்பெயர் ஆகி எழுதியவர். நண்பரின் அழைப்பால் “ ஏதோ சௌக்கியம் பராவியில்லை” என்ற வரிகளை இணைத்திருக்கிறார். அடுத்தடுத்த வரிகள் அனைத்தும் அந்த இரவில் நான் எதிர்கொண்ட மனநிலைதானே தவிர, அது காதலுக்காக எழுதவில்லை என்கிறார் யுகபாரதி.


பாராட்டிய வித்யாசாகர் :


அதன் பிறகு அடுத்த நாள் பாடலை கொண்டு போய் காட்டியது. வித்யாசாகர் யுகபாரதியை அழைத்து . நேற்று நான் அப்படி நடந்துக்கொள்ளாவிட்டால் இப்படி புதுமையாக எழுதியிருப்பீர்களா? இனி நான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் ஒரு பாடல் உங்களுடையதுதான் என்றாராம். வித்யாசாகர் இசையில் 300 க்கும் மேற்பட்ட பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.