இந்திய சினிமா என்கிற போது பெரும்பாலும் தமிழ் , இந்தி , தெலுங்கு மொழியில் வெளியாகும் படங்களே பெரிய அளவில் கவனம் பெறுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்குள் மலையாள சினிமா பல்வேறு திரைப்படங்களின் மூலம் சர்வதேச அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. கன்னட சினிமாவைப் பொறுத்தவரை பல்வேறு முக்கியமான படைப்பாளிகளை கொண்டிருந்த வரலாறு அதற்கு இருக்கிறது. திரைப்படங்கள், நாடகங்கள், இலக்கியம் முதலிய கலைவடிவங்களில் பல்வேறு முக்கியமான படைப்புகள் இருக்கின்றன. இடைப்பட்ட காலத்தில் கன்னட சினிமா ஒரு தொய்வை சந்தித்தது. சமீப காலங்களில் கன்னட மொழியில் வெளியாகும் பல்வேறு படங்கள் விமர்சன ரீதியாகவும் வனிக ரீதியாகவும் கவனம் ஈர்க்கின்றன. 2023 ஆம் ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற கன்னட திரைப்படங்களைப் பார்க்கலாம்.


சப்தா சாகரதாச்சே எல்லோ (Side A , Side B) - sapta sagaradaache ello




 


ஹேமந்த் ராவ் இயக்கத்தில் ரக்‌ஷிட் ஷெட்டி , ருக்மினி வசந்த் இயக்கத்தில் வெளியான சப்தா சாகரதாச்சே எல்லோ படம் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட ஒரு படம். எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாத சூழலில் வெளியாகி பிற மொழிகளிலும் கவணம் ஈர்த்தது. எத்தனையோ காதலைப் பற்றியத் படங்கள் வெளியானாலும் காதல் என்கிற ஆதாரமான உணர்ச்சியை மிக நவீனமான ஒரு கதையாடலாக இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹேமந்த். 


ஹாஸ்டல் ஹுடுகாரு பேகாகிட்டாரே - Hostel Hudugaru Bekagiddare




அறிமுக இயக்குநர் நிதிஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படம் , ஒரு ஆண்கள் விடுதியில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கும் படம். தன்னுடைய இறப்புக்கு மாணவர்கள் தான் காரணம் என்று எழுதிவைத்துவிட்டு ஹாஸ்டல் வார்டம் தற்கொலை செய்துகொள்கிறார். இதற்கு காரணமானவர்கள் சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கிறார்கள். பரபரப்பான ஒரு டார்க் காமெடியாக உருவான இந்தப் படம் அதிக கவனம் ஈர்த்தது.


டட்ஸமா டட்பவா - Tatsama Tadbava




தனது கணவன் காணாமல் போனதை காவல் அதிகாரிகளிடம் புகாரளிக்கச் செல்கிறார் ஒரு பெண். இதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் படத்தின் கதையை தீர்மானிக்கின்றன. விஷால் ஆத்ரேயா இயக்கி  மேகனா ராஜ் மற்றும் பிரஜ்வால் தேவராஜ் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.


டோபி - Toby




தன்னை ஒரு பெண்ணாக மாற்றிக்கொள்ள விரும்பும் ஆணைப் பற்றிய கதை டோபி. பாசில் அல்ச்சலக்கல் இந்தப் படத்தை இயக்கி ராஜ் பி ஷெட்டி இந்தப் படத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற இந்தப் படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பல தரப்பு ரசிகர்களால் பாராட்டப் படுகிறது.


டேர்டெவில் முஸ்தஃபா - Daredevil Musthafa




இயக்குனர் ஷஹாங்க் சோகல் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஷிஷிர் பைகாடி, ஆதித்யா அஷ்ரீ, அபய், சுப்ரீத் பரத்வாஜ் மற்றும் ஆஷித் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் விறுவிறுப்பான த்ரில்லர் படம்.


19.20.21




 நதிச்சரமி என்கிற விருது வென்ற படத்தை இயக்கிய மன்சூர் இயக்கியுள்ள இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தைச் சேர்ந்த இளைஞர் நக்ஸல் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப் படுவது அதிலிருந்து தன்னை நிரபராதி என்று காட்டி அந்த இளைஞர் வெளிவரும் போராட்டை படமாக சித்தரிக்கிறது.