எல்லா தலைமுறை ரசிகர்களும் எல்லா தலைமுறை நடிகர்களையும் கொண்டாடும் ஒரு காலம் இது. 2 கே கிட்ஸூக்கு சில்க் ஸ்மிதாவும் ஸ்ரீதேவியும் பிடிக்கிறது 90ஸ் கிட்ஸ்களுக்கு இவானாவும் பிடிக்கிறது. தமிழ் மற்றும் பிற மொழியில் இருந்தும் புது புது நடிகைகள் அறி,முகமாகி வருகிறார்கள் எல்லா நடிகைகளும் ரசிகர்களை கவர்வதில்லை. இந்த ஆண்டு அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்த நடிகைகளைப் பார்க்கலாம்


நிமிஷா சஜயன்




மலையாளத்தில் நடிப்பில் அசத்திக் கொண்டிருந்த நிமிஷா சஜயன் சித்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வருகை தந்தது நம் கொடுப்பினை என்று தான் சொல்ல வேண்டும். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் மலையரசியாக இன்னும் மக்களுடன் இணைந்துவிட்டார் நிமிஷா. மேலும் பல்வேறு புதுவிதமான கதாபாத்திரங்களில் அவரைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


திவ்யான்ஷா கெளஷிக்




ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய மைக்கெல் மற்றும் சித்தார்த் நடித்த டக்கர் படத்தில் நடித்த திவ்யான்ஷா கெளஷிக் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இரண்டு படங்களிலுமே அவர் நடித்த கதாபாத்திரங்கள் அதீத வசீகரமானதாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் அதே தன்னுடைய கதாபாத்திரங்களுக்காக இல்லாமல் கிளாமருக்காக அதிகம் பேசப்பட்டார்.


சம்யுக்தா மேனன்




தனுஷ்  நடித்த வாத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வருகை தந்தார் மலையாள நடிகை சம்யுக்தா மேனன். வாத்தி படத்திற்கு கிடைத்த சுமாரான வரவேறுபோ என்னவோ அவரது வருகை பெரிதாக தெரியவில்லை.


சான்யா ஐயப்பன்




சமீபத்தில் தமிழில் வெளியான இறுகப் பற்று படத்தில் நடித்தவர் சான்யா ஐயப்பன். மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் சான்யா ஐயப்பன் தமிழில் எந்த அளவிற்கு இடம்பிடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்


ராதிகா ப்ரீத்தி




சின்னத்திரை  நடிகையாக வலம் வந்த ராதிகா ப்ரீத்தி சந்தானம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். சமீபத்தில் வெளியான 80 ஸ் பில்டப் படத்தில் சானியா ஐயப்பன்  நடித்திருந்தார்.


ப்ரீத்தி அஸ்ரானி




சசிகுமார் நடித்த அயோத்தி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி இருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி. அயோத்தி ஒரு  நல்ல சாய்ஸ்தான் .


மிர்னா மேனன்




ஜெயிலர் படத்தில் ரஜினியை தவிர வேறு யாரையும் பார்க்காமல் படம் பார்த்த ரசிகர்கள் இருக்கிறார்கள் . அதே கூட்டத்தில் நடிகை மிர்னாவை மட்டுமே பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம் தான். தற்போது மிர்னா ஃபான்ஸ் கிளம் கூட உருவாகி இருக்கிறது