யாஷிகாவும், தோழியும்.. சோஷியல் மீடியாக்களில் வைரலாகும் எமோஷ்னல் வீடியோ..!

மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்பாக நினைவு திரும்பிய யாஷிகா, தோழியின் மரணச்செய்திக்கேட்டு மனம் உடைந்துபோனார். தோழியின் மரணம் எனக்கு குற்ற உணர்ச்சியாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

Continues below advertisement

 நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் உயிரிழந்த தோழியுடன் சேர்ந்து பூமராங் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது தோழியான ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த வள்ளிச்செட்டி பவனி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் புதுச்சேரி சென்று இருந்தார். புதுச்சேரியில் யாஷிகா ஆனந்த்தும், நண்பர்களும் அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பின்பு பாண்டிச்சேரியிலிருந்து தனது நண்பர்களுடன் சென்னை  கிழக்குக் கடற்கரை சாலை வழியாக  சென்னை நோக்கி சென்றுள்ளனர். அப்போது தான் செங்கல்பட்டு மாவட்டம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் அவர்கள் வாகனம் அதிவேகமாக சென்று கொண்டிருந்தப்போது சாலையின் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் யாஷிகா ஆனந்த பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார். ஆனார் அவரது தோழியான வள்ளிச்செட்டி பவனி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்பாக நினைவு திரும்பிய யாஷிகா, தோழியின் மரணச்செய்திக்கேட்டு மனம் உடைந்துபோனார். தோழியின் மரணம் எனக்கு குற்ற உணர்ச்சியாக உள்ளது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான், எனது வீட்டிற்கு சென்றால் எனது தோழி பவனியின் ஞாபகம் வரும். அதனால்தான் எனக்கு தெரிந்த நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் அவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், மறைந்த தோழி பவானியுடன் இருந்த வீடியோ ஒன்றினை அவர் பதிவு செய்துள்ளார். இதில் யாஷிகா மற்றும் அவரது தோழியுடன் இணைந்து மகிழ்வாய் செய்த ஒரு சிறிய பூமராங் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதோடு அதில் broken heart emoticon படத்துடன் வெளிவந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola