யஷ் நடித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள நிலையில், நடிகர் யஷ் குறித்த பழைய விமர்சனம் ஒன்று மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு யஷின் தாயார் புஷ்பா அருண்குமார் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் பழைய கருத்தை சுட்டிக்காட்டி, தனது மகனின் திரைப்பயணம் குறித்து அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

யஷ் குறித்து அல்லு அர்விந்த்

கடந்த 2023-ம் ஆண்டு முன்னணி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தை ல்லு அரவிந்த், யஷ் யஷ் குறித்து பேசியிருந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் மீண்டும் வைரலானது. இதில் அவர் கேஜிஎஃப்’ படங்களுக்கு முன்பு யஷ் யார் என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் வெற்றிதான் யஷை மிகப்பெரிய நட்சத்திரமாக மாற்றியதாகவும், அதற்கு முன்பு அவருடைய நிலை என்ன என்பதையும் குறிப்பிடும் வகையில் அவரது கருத்து அமைந்திருந்தது. இந்த கருத்து தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.

யஷின் தாயார் பதில் 

இந்த நிலையில் யஷின் தாயார் புஷ்பா அருண்குமார் செய்தியாளர்களிடம் தனது மகனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். ‘கேஜிஎஃப்’ படத்திற்கு முன்பே யஷ் தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களை கொடுத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, யஷ் சாதாரணமானவர் அல்லது யாருக்கும் தெரியாதவர் என்று கூறுவது சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement

மேலும், “அவர் தீவிரவாதி அல்ல. அவரைப் பற்றி ஏன் அச்சப்பட வேண்டும்?” என்ற பொருளில் அல்லு அரவிந்தின் கருத்தை விமர்சித்துள்ள புஷ்பா, யஷ் எந்த பின்னணியிலிருந்து வந்தார் என்பதையும் நினைவூட்டியுள்ளார். யஷின் தந்தை பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர் என்றும், எந்த பெரிய தொழிலதிபர் அல்லது திரைத்துறை பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் மகன் இந்த உயரத்தை அடைந்ததாகவும் அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.

யஷின் திரைப்பயணம் எளிதானதாக இருந்ததில்லை. கர்நாடகாவில் இருந்து பெங்களூரு வந்து நடிகராக வேண்டும் என்ற கனவுடன் போராடிய அவர், பின்னர் கன்னட சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். ‘கேஜிஎஃப்’ திரைப்படம் அவரது புகழை இந்திய அளவில் கொண்டு சென்றாலும், அதற்கு முன்பே கன்னட திரையுலகில் வெற்றிகளை பதிவு செய்திருந்தார்.