இசையமைப்பாளர் அனிருத் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகியபடி இருந்தன. இதுகுறித்து அனிருத் மற்றும் காவ்யா மாறன் குடும்பத்தினர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் இசையமைப்பாளர் அனிருத்தின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் அனிருத் திருமணம் குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர் இதுகுறித்து பேசினார். 

Continues below advertisement

அனிருத் திருமணத்தை உறுதிபடுத்திய ஒய் ஜி மகேந்திரன் 

இசையமைப்பாளர் அனிருத் குறித்து பேசியபோது " இன்று வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்திருக்கும் புகழைப் போல் தான் அனிருத் அன்று பிரபலமானார். ஆனால் அவர் ரொம்ப உறுதியாக இந்த துறையில் நிற்கிறார். என்னுடைய சாருகேசி படத்தின் மோஷன் போஸ்டரை அவர்தான் வெளியிட்டார். அனிருத்திற்கு நான் வாழ்த்து சொல்லியாகனும். ஒரு பெரிய திருமணத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறார். அனிருத் காவ்யா மாறன் ஒரு நல்ல ஜோடி. அவ்வளவு பெரிய கிரிக்கெட் அணியை நிர்வகிப்பது என்பது சும்மா கிடையாது. திருமணத்திற்கு இருவரும் பின் மியூசிக்கல் பிஸ்னஸ் செய்வார்கள்" என ஒய் ஜி மகேந்திரன் கூறியுள்ளார்

Continues below advertisement