டபிள்யூ டபிள்யூ ஈ(WWE) குத்துச்சண்டை விளையாட்டில் மிகவும் பிரபலமான வீரர்களில் ஒருவர் ‘த ராக்’. டிவைன் ஜான்சன் என்ற இயற்பெயரை கொண்ட ராக் இந்தக் குத்துச்சண்டை களத்தில் பலருடைய மனதை கவர்ந்தவர். அத்துடன் இவர் சில ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இவ்வாறு நடிப்பு மற்றும் குத்துச்சண்டை என்று பலரின் மனதை கவர்ந்த ராக் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இளமைக்காலப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இளமை திரும்புதே
முதலில் தனது சிறு வயதில் தனது தந்தையுடன் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த ராக் தனது தந்தை குறித்த தனது நினைவுகளை பகிந்துகொண்டிருக்கிறார். மற்றொரு புகைப்படம் ராக் தான் பதினைந்து வயது இளைஞனாக இருக்குபோது எடுத்துக்கொண்டது. முதல் புகைப்படத்தில் க்யூட்டான சுட்டிக் குழந்தையாக இருந்த ராக் இரண்டாவது புகைப்படத்தில் கோபகார முரட்டு இளைஞ்னாக வளர்ந்து நிற்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தனது அப்பாவுடனான புகைப்படத்தைப் பகிர்ந்த அவர் “எனக்கு குத்துச்சண்டை பழக்க எனது தந்தை என்னை மிக கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தினார். அப்போது எல்லாம் நான் அதை வெறுத்தேன் ஆனால் இன்று அவரது முயற்சியை நான் பாராட்டுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
ராக் நடித்தப் படங்கள்
தி மம்மி ரிடர்ன்ஸ், ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் , ஜர்னி டூ தி மிஸ்டீரியஸ் ஐலாண்ட், ஜுமாஞ்ஜி என மொத்தம் கிட்டதட்ட 50 படங்களில் நடித்துள்ளார் ராக் என்கிற டிவேய்ன் ஜான்சன். ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் திரைப்படத்தில் இவர் நடித்த ஹாப்ஸ் என்கிற கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.