தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்த விஜயின்  ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட இருக்கிறது. விஜயின் கடைசி படத்தை திரையரங்கில் கோலாகலமாக கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது . குறிப்பாக வெளிநாடுகளில் ஜனநாயகன் படத்திற்கான முன்பதிவுகள் படு தீவிரமாக நடைபெற்று வந்தன. முன்பதிவுகளின் வழியாக மட்டுமே படம் கிட்டதட்ட ரூ 50 கோடி வரை வசூலித்துள்ளது நிலையில் படத்தின் ரிலீஸ் தடைபட்டுள்ளது . இதனால் படம் இரண்டு தேதிகளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது 

Continues below advertisement

விஜய்க்கு கெடுபிடி கொடுத்த சென்சார் வாரியம் 

அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு விஜயின் கடைசி படமாக வெளியாக இருக்கும் படம் ஜனநாயகன். அரசியல் கட்சித் தொடங்கி தனது முதல் கட்சி மாநாட்டில் விஜய் பாஜக மற்றும் திமுகவை தனது கொள்கை எதிரிகளாக அறிவித்திருந்தார். ஒவ்வொரு அரசியல் பரப்புரையின் போதும் இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வந்தார். விஜயுடன் பாஜக கூட்டணி சேர முற்படுவதாகவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் பாஜகவை தனது கொள்கை எதிரி என திட்டவட்டமாக விஜய் கூறிவந்தார்.  தற்போது அவரது படத்தை வெளியிடுவதற்கு கெடுபிடி கொடுத்துள்ளது மத்திய தணிக்கு குழு. 

9 ஆம் தேதி தீர்ப்பு 

வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகலம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெளியாக இருந்தது. அமெரிக்கா , ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளில் படத்திற்கான முன்பதிவுகள் ஒரு வாரம் முன்பே தொடங்கி டிக்கெட் விற்பனை சிறப்பாக நடைபெற்று வந்தது. படத்தை மறுதணிக்கை செய்ய 4 வாரங்கள் தேவை என்றும் தணிக்கை வாரியம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தணிக்கை குழு சொன்ன திருத்தங்களை ஏற்கனவே படக்குழு சரிசெய்துவிட்டதால் ஜனவரி 9 ஆம் தேதி முடிந்த அளவு சீக்கிரமாக தீர்ப்பு வழங்க முயற்சிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் படம் சொன்ன தேதிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Continues below advertisement

முன்பதிவுகளில் 50 கோடி

இந்தியாவில் ஜனவரி 9 ஆம் ஜனநாயகன் வெளியாகாது என்றாலும் வெளிநாடுகளில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு படம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. தற்பொது வரை முன்பதிவுகளில் வழியாக மட்டும் படம் சுமார் ரூ 47 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெர்விக்கின்றன. தற்போது இந்தியாவில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுமா அல்லது அதே தேதியில் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. முன்னதாக விஜயின் தலைவா படத்தின் ரிலீஸ் தாமதமானபோது வெளிநாடுகளில் முன்கூட்டிய படம் வெளியானது. அல்லது இதுவரை விற்பனையான டிக்கெட்களுக்கான பணம் ரசிகர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டு ஒரே நாளில் உலகம் முழுவதும் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

படத்தின் ரிலீஸ் தாமதமாகும் பட்சத்தில் இது படத்தின் வசூலை பெரியளவில் பாதிக்கும் என வர்த்தக நிபுனர்கள் கூறுகிறார்கள்.