அமெரிக்காவில் 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்ததும், அந்த விழாவில் பிரபல காமெடியனான கிறிஸ் ராக்கை , ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மேடையில் அறைந்ததும் நாம் அறிந்ததே. இந்த நிலையில் வில் ஸ்மித் கோவத்தை கட்டுப்படுத்தவும் , அமைதியை விரும்பியும் ஆன்மீக சுற்றுப்பயணத்திற்கா இந்தியா வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கூட அவர் சத்குருவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. யோகா மற்றும் மன அமைத்திக்கான பயிற்சிகளை எடுத்துக்கொள்வதற்காக வில் ஸ்மித் இந்தியா வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வில் ஸ்மித்தின் இந்திய ஆன்மீக வருகையை பிரபல ஆங்கில பத்திரிக்கைகள் விமர்சித்து வருகின்றன. வில் ஸ்மித் ,கிறிஸ் ராக்கை அறைந்த பிறகு மேடையில் கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகு தனது சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றின் மூல கிறிஸ்ஸிடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டார். ஆனால் கிறிஸ் ராக்கிடம் வில் இதுவரையில் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் ஆன்மீக பயணம் வந்துள்ள கிறிஸ் ராக்கை பிரபல insiders பத்திரிக்கை இந்த பயணம் ஒரு இழிந்த மற்றும் அபத்தமான செயல் (“cynical and ridiculous”) என குறிப்பிட்டுள்ளது. அதே போல Page Six பத்திரிக்கையானது "எந்த நமஸ்தேஸும் அதை ஈடுசெய்யாது" ( “No amount of Namastes will make up for that.”) என குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் பொழுது , வில் ஸ்மித்தின் மனைவியின் முடி இல்லாத தலையை கிறிஸ் ராக் கேலி செய்வது போல நகைச்சுவை செய்தார். இதனை ஆரம்பத்தில் சிரித்து என்ஜாய் செய்த வில் , தனது மனைவியின் முகம் மாறியதும் , மேடைக்கே சென்று கன்னத்தில் அறைந்தார். லைவாக சென்ற இந்த காட்சிகள் பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது. சிலர் வில் ஸ்மித்தை ஆதரித்தாலும் , பலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.