தனது தனித்துவ நடிப்பு மற்றும் முக பாவனைகளால் ரசிகர்களின் அன்பை பெற்றவர் முனிஷ்காந்த். இவரது இயற்பெயர் ராமதாஸ். தனது நண்பர் காளி வெங்கட் மூலம் முண்டாசு பட்டியில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற முனிஷ்காந்த், ராமதாஸ் முதல் படத்திலேயே அதிக கவனம் பெற்றார். அதன் விளைவுதான் ராமதாஸ் என இருந்த அவரது பெயர் தற்போது முனிஷ்காந்த் என்றே மாறிப்போனது.
திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த முனிஷ்காந்த் பல படங்களில் முக்கிய கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். குலேபகாவலி, வேலைக்காரன், மரகத நாணயம், போங்கு, மாநகரம், டார்லிங், பசங்க-2, 10 எண்றதுக்குள்ள, ஜிகர்தண்டா , பேட்ட, ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி , மரகத நாணயம் , பேட்ட உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி தந்தது. இவருக்கும் கனிமொழி என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைப்பெற்றது. அந்த சமயத்தில் 56 வயதில் திருமணம் செய்யும் முனிஷ்காந்த் , நடிகர்கள் தாமதமாக திருமணம் செய்வது ஏன் என சரமாரியாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியது. உண்மையில் அவருக்கு 2018 இல் 56 வயதென்றால், தற்போது 60 வயதாக வேண்டுமல்லாவா.. இது குறித்து நேர்காணல் ஒன்றில் முனிஷ்காந்த பகிர்ந்துள்ளார்.
அதில் ” என் திருமணத்திற்கு முன்பு , எனது மனைவி என்னிடம் விக்கிப்பீடியாவில் குறிப்பிட்டிருந்த வயதை சுட்டிக்காட்டி என்னங்க உங்களுக்கு 56 வயதா என கேட்டார். அட... என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது என , என்னுடைய ஸ்கூல் சர்டிஃபிக்கட்டை எடுத்து காட்டி என்னுடுடைய வயது இதுதான் என விளக்கினேன். விக்கிப்பீடியாவுல அவங்களுக்கு ஒரு சந்தோஷம் போல , என் வாழ்க்கையில விளையாடிருச்சு. அதன் பிறகு அது யாரு ? என்ன ? எப்படி அதை மாற்றலாம் என பார்த்தேன். பின்னர் அப்படியே விட்டுட்டேன். அது இனிமேல் எப்படி இருந்தால் என்ன , நமக்குதான் திருமணம் ஆகிவிட்டதே’ என்றார்.
தற்போது விக்கிப்பீடியாவில் முனிஷ்காந்தின் வயது 36 ஆக மாற்றப்பட்டுள்ளது. காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் நகைச்சுவை கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிக்கும்படியாக நடிக்கும் முனிஷ்காந்த் ரஜினியுடன் நடிக்கும் பொழுது , அவர் முகத்தை பார்த்தே அதிக டேக் வாங்கியதாக தெரிவித்தார். ரஜினி அதை கண்டு மறுபடியும் மறந்துட்டே.. என சிரித்தபடியே தட்டிக்கொடுத்தார் என்று கூறும் முனிஷ்காந்த்..”எனக்கு காமெடியாகனாக நடிப்பதை விட வில்லனாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை, வில்லனாக என்னுடைய ரோல் மாடல் நாசர் சார்தான். ஹீரோவாக எனக்கு ரஜினி சாரை ரொம்ப பிடிக்கும் “ என்கிறார்.