விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கடந்த சில நாட்களாக தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க போராடி வருகிறது. பிற கட்சிகளின் ஆதரவு கிடைத்தபின்னும் அவரை சந்திக்க ஆளுநர் அனுமதி மறுத்துள்ளார். தேர்தலில் தவெக ஜெயித்தவும் நேரடியாக விஜய் வீட்டிற்கே வந்து தனது நிலைப்பாட்டை தெரிவித்த த்ரிஷா இதுவரை விஜய் ஆட்சிமைக்க பல கெடுபிடிகளை கொடுத்து வரும் பாஜகவுக்கு எதிராகவோ அல்லது ஆளுநருக்கு எதிராகவோ ஏன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது. அந்த அடிப்படையில், ஆளுநரை சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதம் வழங்கினார். ஆனால், ஆளுநர் அவரை அழைக்கவில்லை. இதனிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற, திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார். அதைத் தொடர்ந்து, 5 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உடனடியாக விஜய்யுடன் கூட்டணி சேர்வதாக அறிவித்து, திமுகவிற்கு அதிர்ச்சி அளித்தது.

தொடர்ந்து, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால், அவர்கள் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், வெளியில் இருந்து தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனிடையே, விசிக மட்டும் தங்களது முடிவை கூறாமல் இரண்டு நாட்களாக இழுத்தடித்து வந்தது. இந்நிலையில், சற்று முன்னர் தான் தங்களது ஆதரவு கடிதத்தை விசிக தவெகவிடம் வழங்கியது. அதோடு, புதிய திருப்பமாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-ம் தவெகவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து,  தவெக மொத்தம் 120 இடங்கள் கிடைத்துள்ளன.

Continues below advertisement

இதைத் தொடர்ந்து, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காகவிஜய் நேரம் கேட்டுவிட்டு, ஆளுநர் மாளிகைக்கு கிளம்பிச் சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே, ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை என்ற தகவல் கிடைக்கவே, அவர் அப்படியே யூ டர்ன் அடித்து, மீண்டும் வீடு திரும்பியுள்ளார்இதையடுத்து, ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.

வாய் திறக்காத த்ரிஷா

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் விஜயை வந்து சந்தித்த ஒரு சில நபர்களில் நடிகை த்ரிஷாவும் ஒருவர். விஜய் த்ரிஷாவை வைத்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் பேசப்பட்டு வந்த நிலையிலும் த்ரிஷா விமர்சனங்களுக்கு அஞ்சாமல் தனது ஆதரவை வெளிப்படையாக காட்டி வருகிறார். பெரும்பான்மை பெற்றும் விஜயை ஆட்சி அமைக்கவிடாமல் பாஜக மற்றும் ஆளுநர் இழுத்தடித்து வருவதாக விஜயின் ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். ஆனால் த்ரிஷாவைப் பொறுத்தவரை பாஜகவுக்கு எதிராகவோ ஆளுநருக்கு எதிராகவோ அவர் எந்த வித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. அத்தனை சர்ச்சைகள் மத்தியிலும் த்ரிஷா விஜயுடன் திருமண நிகழ்வில் கலந்துகொண்டார். தேர்தலில் தவெக வெற்றிபெற்றதும் நேரடியாக விஜய் வீட்டிற்கே சென்றார். இதை எல்லாம் செய்பவர் ஏன் பாஜகவுக்கு எதிராக வாய் திறக்காமல் இருக்கிறார் என த்ரிஷா மீத் விமர்சனங்கள் எழுந்துள்ளன.