கோவையில் உள்ள கொரோனா தேவி கோவில் அண்மைக்காலமாக மிகவும் பிரபலமாகி வரும் நிலையில், அந்த சிலையை பிரபல நடிகை வனிதா விஜய்குமாருடன் ஒப்பிட்டு பல மீம்ஸ் வெளியாகி வருகின்றன. ட்விட்டர் தலத்தில் சில நெட்டிசன்கள் இந்த மீம்ஸ்சை வனிதாவை டேக் செய்தே வெளியிட்டு வருகின்றனர். இதை பார்த்து கடுப்பான வனிதா விஜயகுமார், இந்த மீம்ஸை ஏன் தன்னை டேக் செய்து வெளியிடுகிறீர்கள் என்று கடுப்பாகி ட்வீட் செய்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் மற்றும் நடிகர் அருண் விஜயின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் நடிப்பில் 1995-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகமானார் வனிதா. ராஜ்கிரணுடன் மாணிக்கம் உள்பட இதுவரை வனிதா திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தோன்றியுள்ளார்.
இந்நிலையில் சில ஆண்டுகள் கழித்து வனிதா மீண்டும் பிக் பாஸ் 3-ஆம் பாகத்தில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம்தான் மீண்டும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் வனிதா. தனது கோபமான சுபாவத்திற்காக அடிக்கடி ட்ரோல் செய்யப்படும் வனிதா தற்போது கொரோனா தேவி சிலையோடு இணைத்து போடப்படும் மீம்ஸை எதிர்கொள்கிறார்.
கோவை நகரில் பிளேக் மாரியம்மன் கோவிலை தொடர்ந்து தற்போது கொரோனா தேவி கோவில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிளேக் நோய் கோவையின் வரலாற்றில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தியது. இன்றைய தலைமுறையினர் அறியாத அந்த கொள்ளை நோய், அக்கால கோவை நகர மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, கிலி பிடித்து ஊரை விட்டே கூட்டம், கூட்டமாக ஓடச்செய்தது. மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது. முறையான தகவல் தொடர்பும், மருத்துவ வசதிகளும் இல்லாத 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், பிளேக் நோய் பாதிப்பினால் கோவையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் உயிரிழந்தனர். 1901-ஆம் ஆண்டில் 53 ஆயிரத்து 80-ஆக இருந்த மக்கள் தொகை, 1911-ஆம் ஆண்டில் 47 ஆயிரத்து 7-ஆக குறைந்து விட்டது என்பதில் இருந்தே, பிளேக் நோயின் வீரியத்தை உணர்ந்துகொள்ள முடியும். இந்த டிஜிட்டல் யுகத்திலும், தற்போது கொரோனா வைரசும் கடந்த ஓர் ஆண்டினை கடந்து மக்களை வாட்டிவருவது அறிவியலுக்கே சவால்விடும் சூழலை தந்திருக்கிறது.