தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகள் மூலம் பலரையும் கவர்ந்தவர் இயக்குநர் மிஸ்கின். படத்தில் மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் மிஸ்கின் வித்தியாசமானவர்தான். தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் , மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. பிசாசுக்கும் காதல் வரும் , அதுவும் மென்மையானதாக இருக்கும் என மாற்பட்ட கோணத்தில் இவர் எடுத்திருந்த பிசாசு முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மிஸ்கின் தனது படத்தின் போஸ்டர்களிலோ , டிரைலர்களிலோ நடிகர்கள் ,தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரை பதிவு செய்வதில்லை. இது குறித்து அவரே விளக்கமளித்துள்ளார் .
அதில் ”போஸ்டர்ல ஒரு இமேஜ் இருக்கு. கம்பெனி பேர் மேல இருக்கும். படமே பெரிதாக இருக்கும் பொழுது , அதில் கீழே இடம் இருக்காது. இப்போ இளையராஜானா அவருடைய பெயரை கண்டிப்பா போடனும். என் பெயர் போடனும் . ஒரு போஸ்டருக்கு ரொம்ப முக்கியம் படம்தான். என்னுடைய பெயரும் , இளையராஜா பெயரும் போடுறதும் வேஸ்ட்தான். ஆனா போட்டு ஆகனும் வேற வழி இல்லை. நான் இப்படியாக என் பெயரை கூட போடமால் ஒரு நாள் போஸ்டர் வச்சப்போ , பி.வாசு சார் போன் பண்ணி என்னப்பா உன் படம்தானே ..என் பெயர் இல்லை..எதும் பிரச்சனையானு கேட்டாரு. அதே போல டிரைலர் இடையில யார் பெயர் போட்ட பார்ப்பாங்க. இறுதியில இளையராஜா, மிஸ்கின் அப்படினு வந்தா சரி.
எனக்கு யாரும் முன்னேறக்கூடாதுங்குற எண்ணம் இல்லை. இளையராஜா அளவுக்கு நீங்க பெரிய ஆளா வந்துட்டா நான் உங்க பெயரை போடுறேன். மகேஷ் முத்துசாமி பெயரை போட்டுருக்கேன். என் கூட வேலை பார்த்த எல்லா ஒளிப்பதிவாளர்களும் பெரிய இடத்துக்கு போயிட்டாங்க. முதல்ல வேலை செய்யுங்க. அதுக்கு பிறகு டைட்டில் கேட்கலாம். இது ஆர்டிஸ்டா நான் பண்ணுறேன்.
இதனால சிலர் கோவப்படுவாங்க. கோபப்பட்டா என் படத்துக்கு வராதே அவ்வளவுதான். இப்படித்தான் ஒரு இசையமைப்பாளர் கூட ஒப்பந்தம் போட்டேன்.கையெழுத்து போடப் போற சமயத்துல எனக்கு இளையராஜாவுக்கு கொடுத்த மதிப்பு கொடுக்கனும்னு சொன்னான். கொடுத்த செக்-அ திரும்பி வாங்கிட்டு , போயிட்டு வா தம்பினு சொல்லிட்டேன். ரொம்ப பேரன்போட எல்லோருக்குமே வாய்ப்பு கொடுக்குறேன். 10 படங்கள் பண்ணினா அவங்களுக்கு பெயர் கிடைக்கும் . டைட்டில்ல நான் பெயர் போட மாட்டேன். அதுக்காக பயங்கரமா திட்டுவாங்க.. ஆள் செட் பண்ணி அடிச்சா கூட எனக்கு கவலை இல்லை “ என தனது நிலைப்பாட்டில் தீவிரமாக இருக்கிறார் மிஸ்கின்