தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் நடிகர் கவுண்ட மணி. பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள கவுண்ட மணி , ஷூட்டிங் சமயத்தில் டயலாக்கில் இல்லாத கவுண்டர்களையும் கூட அள்ளித்தெளிப்பாராம். அதனாலேயே இவருக்கு கவுண்டர் மணி என்ற பெயர் வந்ததாக பல நடிகர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். இன்றைக்கும் கவுண்டமணி - செந்தில் காம்போவில் நகைச்சுவை ஓளிபரப்பு செய்யப்பட்டால் அதனை ஸ்கிப் செய்யாமல் பார்க்கும் எத்தனையோ பேர் நம்மில் உண்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சில நகைச்சுவை கலைஞர்கள் தங்களுக்கான மாறுபட்ட முத்திரையை பதித்து வருகின்றனர். அந்த வகையில் கவுண்டமணி தனக்கென தனி முத்திரையை சினிமா துறையில் தடம் பதித்திருக்கிறார். தற்போது திரைப்படங்களில் இருந்து விலகிஇருக்கும் கவுண்ட மணி , குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
கவுண்டமணி இதுவரையில் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதில் 10 படங்கள் கதாநாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவுண்டமணி எப்போதுமே பிரைவஸியை விரும்பும் ஒரு ஆள் , பொதுவெளியில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கவோ, அல்லது பத்திரிக்கையாளர்களுக்கு புகைப்பட்டத்திற்கு போஸ் கொடுக்கவோ, பேட்டி கொடுக்கவோ விரும்ப மாட்டார். இது குறித்து விளக்கமளித்த அவர் “ , எந்த ஒரு விஷயத்திற்கும் ஓவர் பூஸ்டப் ஆச்சுனா மரியாதை கம்மி. நான் தினமும் டிவியிலதான் வற்றேன். அதன் பிறகு தனியா என்ன பேட்டி ” என்றார். கவுண்டமணியை போலவே கவுண்டர் காமெடி செய்பவர் சந்தானம் . தனது குரு கவுண்டமணிதான் என்றும் , அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன் என்று கூறினார். இது குறித்து விளக்கிய கவுண்டமணி “அப்படி சந்தித்தார் என்றால் சொல்லிக்கொள்ளட்டும் என்றார். மேலும் வடிவேலு , சந்தானம் போன்ற நகைச்சுவை கலைஞர்களின் வளர்ச்சியை கண்டு எனக்கு எந்த எண்ணமும் இல்லை. சினிமா காரர்கள் யாரும் யாருக்கும் எதிரியல்ல. எனக்கு யாரும் எதிரியல்ல“என கூறினார்.
கவுண்டமணி நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் , நாட்டாமை,சின்னகவுண்டன், வைதேகி காத்திருந்தால், சூரியன் உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைகள் இன்றளவும் பிரபலம் . குறிப்பாக பல மீம்ஸ் கிரியேட்டர்களின் வீடியோவிற்கு அழகு சேர்த்து வருகிறது. குறிப்பாக பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா (வைதேகி காத்திருந்தாள்), இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது (வைதேகி காத்திருந்தாள்),நாராயணா.. இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி. (சூரியன்),ஊ இஸ் த டிஸ்டபென்ஸ் (சூரியன்),அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா (சூரியன்),சொரி புடிச்ச மொன்ன நாயி (கோயில் காளை),ஆ! இங்க பூஸ், அங்க பூஸ், ரைட்ல பூஸ், லெஃப்ட்ல பூஸ், காந்த கண்ணழகி, உனக்கு மினிஸ்டரியில் இடம் பாக்கறேன் (சூரியன்),டேய் இந்த டகால்டி வேலைலா என்கிட்ட வச்சிக்காத, உலகத்திலேயே ரெண்டு புத்திசாலிங்க. ஒண்ணு ஜி.டி. நாயுடு. இன்னொன்னு இந்த தர்மடி தர்மலிங்கம்,இப்படி கண்ட கண்ட பயலுக எல்லாம் வா தலைவா, போ தலைவா, பொந்துரு தலைவா சொல்லறதனால தான் ஒரிஜினல் தலைவருக்கே மரியாதை இல்லாம போயிடுச்சு இனிமே எவனயாவுது தலைவான்னா உன் பன்னி தலை பிஞ்சி போயிடும் உள்ளிட்ட வசனங்கள் கவுண்டமணியின் குரலில் மிகப்பிரபலம்.