ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளரின் கடன் பிரச்சனை காரணமாக இந்த படம் கடைசி நேரத்தில் வெளியாகவில்லை. இதனால் கருப்பு படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். கருப்பு படத்தை வெளியிட வேண்டுமென்றால் தயாரிப்பாளருக்கு மொத்தம் ரூ94 கோடி பணம் தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

எஸ்.ஆர் பிரபுவுக்கு சொந்தமான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் கருப்பு திரைப்படத்தை தயாரித்துள்ளது. கருப்பு படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திரையரங்குகள் இப்படத்தை நீக்கத் தொடங்கின. இதனால் ரசிகர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. கருப்பு திரைப்படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி தெரிவித்திருந்தார் ஆனால் படக்குழுவினர் எவ்வளவு முயற்சி செய்தும் படத்தை சொன்ன தேதிக்கு வெளியிட முடியவில்லை.

தயாரிப்பாளர் கடன் எவ்வளவு ?

யர்ஸ் தயாரிப்பில் கடைசியாக கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியதால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கருப்பு படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக எஸ்.ஆர் பிரபு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பைனான்ஸ் பெற்றுள்ளார். அதே நேரம் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் சிலருக்கும் சம்பள பாக்கி இருந்துள்ளது . தற்போதைய நிலைப்படி திருப்பூர் சுப்ரமணியம் , மதுரை அன்பு மற்றும் ஜஸ்வந்த் பண்டாரி ஆகியோருக்கு பெரும் தொகையை எஸ்.ஆர் பிரபு திருப்பி கொடுக்க வேண்டியுள்ளது. கருப்பு படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்றால் தயாரிப்பாளருக்கு மொத்தமாக ரூ 94 கோடி பணம் தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

சூர்யா தலையீடு

சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் வெளியாகும் போதும் இதேபோல்  நீதி பிரச்சனை ஏற்பட்டது. படத்தை வெளியிட சூர்யா இந்த பிரச்சனையை தீர்க்க தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். அதேபோல் தற்போது கருப்பு திரைப்படத்தை வெளியிடவும் சூர்யா தனது சக்திக்கு மீறி படதயாரிப்பு நிறுவனத்திற்கு உதவி செய்துள்ளார். ஆனால் ரூ94 கோடி என்பது மிகப்பெரிய தொகை என்பதால் அவரால் தனியாளாக இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது. ட்ரீம் வாரியஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக ஒரு சில தயாரிப்பாளர் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் சமரச புள்ளியை எட்டி படம் இன்று மாலைக்குள் வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன.