மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பம் என்றாலே ஒற்றுமைக்கு பெயர் போன குடும்பம். சிவாஜி தனது வீட்டை கட்டும் பொழுது தனது சகோதர்களும்  தன்னுடன் சேர்ந்து வாழ்வதற்காகவே அதனை பிளான் செய்து கட்டினார் என பல மேடைகளில் பிரபு தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில் சிவாஜியின் மகன்கள் மீது அவரது மகள்களே வழக்கு தொடர்ந்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 





ஒற்றுமையாக இருக்க ஆசைப்பட்ட சிவாஜி:


சிவாஜிக்கு ராம்குமார் , பிரபு என இரண்டு மகன்களும் , சாந்தி , தேன்மொழி என இரண்டு மகள்களும் உள்ளனர். ராம்குமாரை நடிகராகவும் தயாரிப்பாளராகவும் நாம் அறிந்திருக்கிறோம். நடிகர் பிரபுவிற்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை.மூத்த மகள் சாந்தி கணேசனின் டாக்டர். நாராயண சாமி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.  இளைய மகள் தேன்மொழி,  டாக்டர். கோவிந்தராஜன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் . நாராயண சாமி , கோவிந்தராஜன் இருவருமே சகோதர்கள் . மகள்கள்  கணவன் வீட்டில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சிவாஜி அண்ணன் , தம்பிக்கு தனது இரண்டு மகள்களை திருமணம் செய்துக்கொடுத்தார்.




தங்கைக்கே சம்மந்தியான பிரபு!


 பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.இவர் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில்தான் பட்டம் பெற்றார். இவரை பிரபு தனது சொந்த தங்கையின் மகனுக்கே திருமணம் செய்து வைத்தார். அதாவது தற்போது  பிரபு மீது வழக்கு தொடுத்துள்ள தங்கை தேன்மொழிதான் , அவரின் சம்பந்தியும் கூட. தேன்மொழியின் மகன் குணாலைதான் பிரபுவின் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். குணால் லண்டலில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார். பிரபுவின் மகளை , தனது மகள் வழி பேர குணாலுக்குதான்  திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என நடிகர் திலகம் அடிக்கடி பிரபுவிடம் கூறுவாராம். பிரபுவின் அம்மாவின் ஆசையும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது.





உறவில் வந்த விரிசல் :


இந்நிலையில் தான், மறைந்த நடிகர் திலகம் சிவாஜியின் குடும்பத்தில் தற்போது சொத்து பிரச்சனையால் மோதல் வெடித்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும் , சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி குற்றம் சாட்டியுள்ளனர். பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாக மனுதாக்கல் செய்துள்ள அவர்கள், நீதிமன்றம் தலையிட்டு தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.