போதைக்கு அடிமையான கேரள திரைத்துறை 

சமீபத்தில் மலையாள நடிகை வின்ஸி அலோசியஸ் நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது போதைப் பயண்பாட்டில் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து ஷைட் டாம் சாக்கோ மீது கேரள போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சோதனை செய்ய முயன்றபோது அவர் தப்பி ஓடினார். தற்போது மலையாள இயக்குநர் கலித் ரஹ்மான் கஞ்சா வைத்திருந்த காரணத்திற்காக கேரளா போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதிகாலை 2 மணியளவில் கலால் துறை அதிகாரிகள் அவர்களது குடியிருப்பில் சோதனை நடத்தியபோது, இயக்குநர், ஒரு நண்பருடன் சேர்ந்து 1.5 கிராம் கஞ்சாவை வைத்திருந்தனர். ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் அந்த பிளாட்டை வாடகைக்கு எடுத்ததாக ஒரு அதிகாரி கூறினார்.கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மூவரையும் நாங்கள் கைது செய்து, கலப்பின கஞ்சாவை பறிமுதல் செய்தோம். அவர்கள் மீது 1985 ஆம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் (NDPS) சட்டத்தின் பிரிவுகள் 20(b) (II) A மற்றும் 29 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கேரளத் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் போதைப் பொருள் பயண்பாட்டிற்கு அடிமையாகியுள்ளது இதன் மூலம் தெரியவருகிறது.

யார் இந்த கலித் ரஹ்மான்

கேரள சினிமாவில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த இயக்குநர்களில் ஒருவர் கலித் ரஹ்மான். பிரபல மலையாள நடிகர் வி.பி கலித்தின் இளைய மகன் கலித் ரஹ்மான். இவரது இரு சகோதரர்கள் சைஜூ கலித் மற்றும் ஜிம்ஷி கலித் இருவரும் ஒளிப்பதிவாளர்கள். துல்கர் சல்மான் நடித்த உஸ்தாத் ஹோட்டல் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் கலித ரஹ்மான். இவரது முதல் படமான அனுராக கரிக்கின் வெல்லம் திரைப்படம் பரவலாக கவனமீர்த்தது. தொடர்ந்து உண்டா  , லவ் என இவரது படங்களுக்கு தனி ரசிகர்கள் உருவாகினார்கள். 2022 ஆம் ஆண்டு டொவினோ தாமஸ் நடித்து  வெளியான தள்ளுமாலா படத்தின் மூலம் மலையாள சினிமாவை கடந்து கவனமீர்த்தார் கலித் ரஹ்மான். சமீபத்தில் பிரேமலு நடிகர் நஸ்லென் நடித்த ஆலப்புழா ஜிம்கானா திரைப்படமும் பெரியளவில் வெற்றிபெற்றது. ஸ்டைலிஸ்ட்டிகான மேக்கிங் , வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை இயக்கிவந்த கலித ரஹ்மான் இன்றைய இளைஞர்களை அதிகம் கவர்ந்த இயக்குநர்களில் ஒருவர்.