சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 173 படத்தை இயக்கப்போவது யார் என்பது கிட்டதட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டது. பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்குவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளன. இருந்தாலும் சமீபத்திய தகவலின்படி டிராகன் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது . இரண்டு இயக்குநர்களும் தங்களது அடுத்த படத்தில் சிம்புவை இயக்கவிருப்பது குறிப்பிடத் தக்கது 

Continues below advertisement

தலைவர் 173

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அடுத்தபடியாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க ரஜினியின் 173 ஆவது படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை முன்னதாக சுந்தர் சி இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது . பின் சுந்தர் சி படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். மகாராஜா படத்தின் இயக்குநர் நிதிலன் சாமிநாதன் அல்லது  பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியர் இருவரில் ஒருத்தர் தலைவர் 173 படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. பார்க்கிங் படத்தைத் தொடர்ந்து சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவிருந்த படம் இன்னும் சில காலம் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கலாம் . 

ரஜினி படத்தை இயக்கும் டிராகன் இயக்குநர்

ஏற்கனவே குழப்பத்தில் இருந்த ரஜினி ரசிகர்களை மேலும் கடுப்பேற்றும் விதமாக மற்றொரு தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த தகவலின்படி டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து ரஜினியிடம் கதை சொல்லியிருப்பதாகவும் இந்த கதையை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஓக்கே சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அஸ்வத் மாரிமுத்து  சிம்புவை வைத்து அவர் இயக்கவிருந்த ஃபேண்டஸி திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் இந்த தகவல் உண்மையில்லை. அஸ்வத் மாரிமுத்து சிம்பு கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இன்னும் 3 வாரங்களுக்குள் தலைவர் 173 படத்தின் இயக்குநர் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம் 

Continues below advertisement