VTK latest Update : மாஸ் காட்டும் கௌதம் மேனன்... "வெந்து தணிந்தது காடு" லேட்டஸ்ட் அப்டேட்
கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர். ரஹ்மான் - நடிகர் சிம்பு என ஒரு வெற்றிகரமான கூட்டணியில் உருவாகியுள்ள "வெந்து தணிந்தது காடு" திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் உலகளவில் திரையரங்குகளில் செப்டெம்பர் 15-ஆம் வெளியாக தயாராக உள்ள நிலையில் தற்போது படத்தின் தியேட்டர் உரிமையை யார் கைப்பற்றியது குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தியேட்டர் உரிமையை கைப்பற்றியது குறித்த லேட்டஸ்ட் அப்டேட்:
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் "வெந்து தணிந்தது காடு" படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியது ஏற்கனவே வெளியான தகவல். ஆனால் தற்போது மற்ற மாநிலங்களில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியவர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் ஷிபு தமீன்ஸ் நிறுவனமும் , கர்நாடக மாநிலத்தில் கேஆர்ஜி ஸ்டுடியோஸ், வடமாநிலங்களில் ஏஏ பிலிம்ஸ் இந்தியா நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. மேலும் உலகளவில் படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை யுனைடெட் இந்தியா எஸ்ப்போர்ட்டர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
பிரமாண்டமான ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா:
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் "வெந்து தணிந்தது காடு". சில தினங்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள் :
கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சிம்பு கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் என்பதால் மற்ற இரண்டு படங்களின் வெற்றியை சேர்த்து இப்படம் சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் பாடல்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
சிம்புவின் மெனக்கெடல்:
இப்படத்தில் சிம்புவின் ஜோடியாக சித்தி இதானி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். இப்படத்திற்காக மிகவும் மெனக்கெட்டு உடல் இடையை வெகுவாக குறைத்துள்ளார் சிம்பு. 21 வயது இளைஞராக இப்படத்தில் நடித்துள்ளார்.
விளம்பர பேருந்து:
படம் வெளியாக இன்னும் சில தினங்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் பிரமோஷனை முக்கியப்படுத்தும் நோக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் இருக்கும் படி பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது. இது ஒரு சிறப்பான விளம்பர டெக்னீக். மேலும் படத்தில் பயன்படுத்தப்பட்ட சில முக்கியமான பொருட்களும் இந்த பேருந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.