பாட்ஷா படத்தில் ரஜினியை கம்பத்தில் வைத்து அடித்தது குறித்து பேசிய நடிகர் ஆனந்த்ராஜ், “ உண்மையில் நான் அப்படி அடித்ததற்கு அந்தக் கம்பமே கோபித்துக்கொள்ளும். அந்தக் கம்பம் இருந்த செட் இன்று பெரிய 5 ஸ்டார் ஹோட்டலாக மாறியிருக்கிறது. இன்றும் நான் அந்த இடத்திற்கு போகும் போது எனக்கு ஒரு வைப்ரேஷன் வரும். நம்ம இங்கதான் ரஜினி சாரை கட்டி வைச்சு அடிச்சோம்னு தோணும். அந்த சமயத்தில் படத்தில் அப்படி நான் ரஜினியை வைத்து அடித்தற்கு எனக்கு ரஜினி ரசிகர்களிடம் எந்த எதிர்ப்பும் வரவில்லை. இந்த விஷயத்தை ரஜினி சார் முன்னமே கணித்திருந்தார். அதனால்தான் அவர் என்னை அந்தக் காட்சியில் என்னை நடிக்க வைக்க முடிவெடுத்துருக்கிறார். அவர் நினைத்தது போலவே, ரசிகர்கள் என்னை அப்படித்தான் பார்த்தனர். ரஜினியை அப்படி அடிக்க சரியான நபர் இவர்தான் என்பதை ஏற்றுக்கொண்டனர்” என்று பேசினார்.
தகவல் உதவி:
1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன்,சரண்ராஜ் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் பாட்ஷா. ஆட்டோ டிரைவராக மாணிக்கம் என்ற கதாபாத்திரத்திலும், கேங்ஸ்டராக பாட்ஷா என்ற கதாபாத்திரத்திலும் ரஜினி நடித்திருந்த விதம் பாட்ஷா படத்திற்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்த இந்தப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பின்னணி இசையும், வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்