அஜித் குமார்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் இப்போது பத்ம பூஷன் அஜித் குமார் ஆகிவிட்டார். டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பத்ம பூஷன் விருதை பெற்றார். இந்த விருது விழாவில் தல அஜித் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பத்ம பூஷன் விருது:
இந்த நிலையில் தான் பத்ம பூஷன் விருது வென்ற அஜித், பல வருடங்களுக்கு பின்னர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்த விஷயங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக படிக்கப்பட்டு வருகிறது.
சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் அஜித் ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வந்தாலும், அவர் கொடுத்த பேட்டி எப்போது சர்ச்சைகளை சந்திக்க துவங்கியதோ அப்போது அமைதி ஆகி விட்டார். ஒரு கட்டத்தில், தனக்கு ரசிகர்கள் சங்கமே வேண்டாம் என முடிவெடுத்த அஜித்... தன்னுடைய படங்களுக்கு புரோமோஷன் நிகழ்ச்சி கூட நடத்த கூடாது என கூறினார். அதே போல் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வது இல்லை.
கடனை அடைக்க சினிமாவிற்குள் வந்த அஜித்:
இந்த நிலையில் தான் இப்போது ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். சினிமாவிற்கு நான் வருவதற்கு காரணம் கடன். என்னுடைய பிஸினலில் கடன் ஏற்பட்டது. கடனை அடைக்க தான் நான் சினிமாவிற்கு வந்தேன். ஒரு சில படங்களில் நடித்து கடனை அடைத்துவிட வேண்டும் என்று தான் நான் சினிமாவிற்கு வந்தேன். அப்போது எல்லாம் நான் படங்களில் நடிப்பதற்கு ஆடிஷன்களில் கலந்து கொண்டேன். அதன் மூலமாக கிடைக்கும் வாய்ப்புகளில் நான் படங்களில் நடித்தேன். சினிமாவிற்கு வந்த போது எனக்கு தமிழ் தெரியாது. டப்பிங் தான் என்னுடைய படத்திற்கு பேசப்பட்டது. நான் நடித்த 6 ஆவது படத்தில் தான் டப்பிங் பேசினேன்.
வாலி படம் எனக்கு திரையுலகில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அதே போல் எனக்கு மங்காத்தா, பில்லா, வரலாறு போன்ற படங்கள் தான் சிறந்த படமாக அமைந்தன என்று அஜித் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.