நானும் ரௌடி தான் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நேற்று தியேட்டர்களில் ரிலீஸானது. நயன்தாராவும், சமந்தாவும் விஜய் சேதுபதியின் அன்புக்கு போட்டி போடுவதாக கதை இருந்தது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டினார்கள். படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தியேட்டரை நிறைத்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ள நிலையில் இந்த படம் எப்படி இருக்கு என பார்க்க ஆர்வமாக இருந்தனர். அனிருத்தின் 25 ஆவது படம் என்பதால் அதுவும் எதிர்பார்ப்பை மென்மேலும் கோபட்டி இருந்தது. படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் சேதுபதி நிறைய யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் ஒரு பேட்டியில் 96 திரைப்படம் குறித்து ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். அந்த படத்தில் கிஸ் ஸீன் இருந்தது என்று கூறி இருந்தார்.



அவர் இதுகுறித்து பேசுகையில், "96 படத்துல என்ன இருந்துச்சுன்னு இப்படி ரசிச்சு பாத்தாங்கன்னு தெரியல எனக்கு. நான் பிரேம் கிட்ட சொல்லிட்டேன் இருப்பேன், ஒண்ணுமே இல்ல அந்த படத்துல எப்படி பாத்தாங்கன்னு கேட்பேன். வந்தாங்க, எல்லாரும் அவங்க அவங்க பள்ளி காலம், நண்பர்கள், காதல நெனச்சு பாத்துட்டே இருக்கும்போது படம் முடிஞ்சு போச்சு, அவ்ளோதான், அதுக்கு மேல என்ன கதை இருக்கு அதுல. ஆமாம் நான் வந்தேன் உன் கல்யாணத்துக்குன்னு நேர்மையா சொல்றான், அவ அழுவா அவ்ளோதான் முடிஞ்சுது. புருஷனோட அசிஸ்டண்ட்ஸ பாப்பாங்க, கல்யாணம் ஆன மாதிரி கத சொல்லுவாங்க, அதுல ஒரு ஞாபகம் வரும்.



புருஷன் வீட்டுக்கு போய் ரெண்டு பேரும் சமைச்சு சாப்பிடுவாங்க அவ்ளோதான். ஆனா அது கடத்துன உணர்வு எல்லாரையும் கனெக்ட் பண்ணிடுச்சு அவ்ளோதான். ஜானு தங்கி இருந்த ஹோட்டல்ல இருந்து ஏர்போர்ட் போறது, சுடுகாட்ட நோக்கி போறதுக்கு சமம். ஒரு உயிர் பிரியுறதுக்கு சமம். அதுதான் இவங்கள பக்க வச்சிருக்கும். முதல்ல அந்த இடத்துல ஒரு லிப்லாக் ஸீன் இருந்துச்சு. ஆனா கடைசி நாள் வரைக்கும் அந்த இடத்துல அது உறுத்திட்டே இருந்துச்சு. நான் சொன்னேன் இது வேண்டாம், இந்த படத்தை பாத்துட்டு நாளைக்கு ரீயூனியன் போறவங்க முத்தத்தை எதிர்பார்ப்பாங்க, அது ரொம்ப தப்பா முடிஞ்சுடும்ன்னு சொன்னேன். அவரும் எத்துகிட்டாரு. ராம் ஜானுவ தொட கூட மாட்டான், அவ்ளோதான் கான்செப்ட்ன்னு முடிச்சோம்."