மேற்கு வங்க எம்.பி. மஹூவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் என்றால் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு நடுக்கம் ஏற்பட்டு விடும். அந்த அளவிற்கு அவரது பேச்சும், திறனும் பிறரையும் ஈர்த்து விடும். குறிப்பாக பாஜக அரசு செய்யும் ஊழல்களையும், சர்வாதிகார போக்கையும் நாடாளுமன்றத்தில் தைரியமாக பேசக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளார். அந்த துணிச்சல் தான் பிறரிடத்தில் அவருக்கான மதிப்பை பெற்றுத் தருகிறது.

மஹூவா மொய்த்ராவுக்கு பிடித்த நடிகர்

பொதுவாழ்க்கையில் திறன் வாய்ந்த அரசியல்வாதியாக இருக்கும் மஹூவா மொய்த்ரா அளிக்கும் பேட்டிகளும் மிகவும் எதார்த்தமானதாக இருக்கும். தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். சொன்ன கருத்துகளில் தவறு இருந்தால் ஆட்சேபனை தெரிவிக்கும் பண்பு கொண்டவர். இந்நிலையில், மஹூவா மொய்த்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபல நடிகரை பற்றி புகழ்ந்து பேசியிருப்பது தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தான் என்னுடைய கிரஷ் என்றும் தெரிவித்திருக்கிறார். 

பங்கஜ் திரிபாதி தான் என் கிரஷ்

அந்த பேட்டியில் அரசியலை தாண்டி சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்து கொண்டே பதில் அளித்த மஹூவா மொய்த்ரா, மிர்ஷாபூர் வெப் தொடரில் நடித்த  பங்கஜ் திரிபாதியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர் தான் என் கிரஷ்னு கூட சொல்லலாம். சமீபத்தில் அவருக்கு ஒரு லெட்டர் எழுதி அனுப்புனேன். அதில், உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களுடன் ஒரு கப் காபி சாப்பிட வேண்டும். நாம் எப்போது சந்திக்கலாம் என எழுதியிருந்தேன். 

ஒரு கப் காபி சாப்பிடலாமா

ஆனால், அந்த கடிதத்திற்கு அவர் பதிலே அனுப்பவில்லை. அப்படி இருந்தும் நான் விடவில்லை. ஒருமுறை பங்கஜ் திரிபாதியை பேட்டி எடுத்த தொகுப்பாளர் மூலம் இந்த செய்தியை அவரிடம் சொல்ல சொன்னேன். ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் ரசிகர்களை சந்திப்பதில்லை என கூறிவிட்டார்கள். இதன் பின்னர் தான் அவர் மீதான அன்பு அதிகரித்தது. ஆனால் எனது முயற்சியை விடவில்லை. நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கிஷன் மூலம் அவரிடம் பேச முயற்சித்தேன். உடனே ரவி கிஷன் பங்கஜ் திரிபாதியுடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார். 

வெட்கப்பட்ட மேற்கு வங்க எம்.பி.

அப்போது நான் தொலைபேசியில் பேசும்பாது கூட என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஒரே படபடப்பு. நான் அவருடன் தான் பேசுகிறேன் என்ற ஷாக்கில் இருந்து வெளியே வர முடியவில்லை. அந்த நேரத்தில் ஒரே வெட்கமாகவும் இருந்தது என மஹூவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.