தமிழ் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையில் புதிய படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வார கொண்டாட்டமாக 5 படங்கள் வெளியாக உள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெளியாகி 3 வாரங்களாக எந்தவொரு புதிய படமும் வெளியாகாத நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மதராஸி, பேட் கேர்ள், காந்தி கண்ணாடி, காட்டி மற்றும் மற்றும் ஹாலிவுட் படமான தி கான்ஜுரிங் வெளியாக உள்ளது.
1. மதராஸி:
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் மதராஸி. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த படம். ,தொடர் தோல்வியில் துவண்டு வரும் முருகதாஸ்க்கு இந்த படம் கம்பேக் தருமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். வித்யுத் வில்லனாக நடித்துள்ளார்.
2. பேட் கேர்ள்:
வெற்றிமாறன் இந்த படத்தை தயாரித்துள்ளார். வர்ஷா பரத் என்ற அறிமுக பெண் இயக்குனர் இந்த படத்தை இயக்கியுள்ளார். அஞ்சலி இந்த படத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்திப்ரியா, சரண்யா, ஹ்ரிது ஹரூண் ஆகியோர் நடித்துள்ளனர். அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பெண்ணின் ஆசைகள், அவர் மீதான அழுத்தங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.
3. காட்டி:
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல கதாநாயகியாக உலா வந்தவர் அனுஷ்கா. இவரது நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாக உள்ள படம் காட்டி. விக்ரம் பிரபு, லாரிசா, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதிபாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். த்ரில்லர் படமாக இந்த படம் வெளியாகிறது. அருந்ததி, பாகுபலி போன்று அனுஷ்காவிற்கு மிகப்பெரிய பெயர் பெற்றுத்தரும் என்று கருதப்படுகிறது.
4. காந்தி கண்ணாடி:
கலக்கப்போவது யாரு மூலம் பிரபலம் அடைந்த பாலா கதாநாயனாக நடித்துள்ள படம் காந்தி கண்ணாடி. ஷெரிப் இந்த படத்தை இயக்கியுள்ளார். பாலா-வுடன் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். பாலாஜி ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
5. தி கான்ஜுரிங்:
ஹாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் கான்ஜுரிங். இந்த படம் இந்தியாவிலும், தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு என்று தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பயமுறுத்தும், திகிலூட்டும் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இதன் 4ம் பாகமான தி கான்ஜுரிங் லாஸ்ட் ரைட்ஸ் நாளை ரிலீசாகிறது.
ஆக்ஷன், குடும்பம், காமெடி, த்ரில் என அனைத்து உணர்வுகளுக்கும் ஏற்ற படம் வெளியாகிறது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த படத்தை குடும்பத்துடன் சென்று திரையரங்கில் ரசிக்கலாம்.