நயன்தாரா - விக்னேஷ் ஷிவன்


 7 ஆண்டுகள் காதல் வாழ்க்கைக்குப் பின் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் என்ற பந்தந்துக்குள் அடியெடுத்து வைத்தார்கள் நடிகை நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன். இருவரும் இணைந்து ரெளடி பிக்ச்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்கள்.  இந்த தம்பதியினர் தங்களுக்கு உயிர், உலக் என்ற இரட்டைக் குழந்தைகள் அதே ஆண்டில் அக்டோபர் 10ஆம் தேதி பிறந்ததாக அறிவித்தனர்.


விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் குழந்தைகளோடு அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளும். இப்படியான நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இரு மகன்களுடன் நயன்தாரா கொஞ்சி விளையாடு பல்வேறு காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஒரு நடிகையாக நயன்தாராவை ரசிகர்கள் அறிந்திருந்தாலும் இந்த வீடியோவில் ஒரு அன்னையாக நயன்தாராவின் அன்பை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.






 இந்த வீடியோவுடன் விக்னேஷ் ஷிவன் “ ஒரு அன்னையாக உனக்கு 10 க்கு 99 மதிப்பெண்கள் கொடுப்பேன். அன்னையர் தின வாழ்த்துக்கள்’ என்று அவர் கூறியுள்ளார்