Watch Video : 100 ரூபா கிடைச்சாலும் புத்தகம்தான் வாங்குவேன்...சமுத்திரகனியின் நூலகம் பார்த்திருக்கீங்களா

இயக்குநர் , நடிகர் என தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள சமுத்திரகனி தனது வீட்டில் ஒரு அறை முழுவதும் புத்தகம் அடுக்கி வைத்துள்ளதை பார்த்திருக்கிறீர்களா

Continues below advertisement

சமுத்திரகனி

கே பாலச்சந்தர் இயக்கிய 'பார்த்தாலே பரவசம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சமுத்திரக்கனி. தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கிய ராஜ் டிவியில் ஒளிபரப்பான குறுந்தொடர்களிலும் பணியாற்றியுள்ளார். சன் டிவியில் மெகாத் தொடர்களாக ஒளிபரப்பான செல்வி , அரசி ஆகிய தொடர்களை இயக்கிய சமுத்திரக்கனி 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் சமுத்திரக்கனிக்கு மிகப்பெரிய  அடையாளம் கொடுத்த படம் என்றால் 2009 ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் படம். 

Continues below advertisement

பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த சமுத்திரகனி சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் தன்னை ஒரு தேர்ந்த நடிகராக வெளிப்படுத்திக் கொண்டார். வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார். சமுத்திரகனி நடித்த சாட்டை திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு பெரிய புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. நடிகராகவும் இயக்குநராகவும் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

சமுத்திரகனியின் நூலகம்

உதவி இயக்குநராக இருந்த காலம் முதலே தீவிர வாசிப்பு பழக்கம் உடையவர் சமுத்திரகனி. தனது புத்தகங்களுக்கு என தனியாக ஒரு நூலகத்தையே வீட்டில் வைத்துள்ளார். தான் உதவி இயக்குநராக இருந்தபோதே 100 ரூபாய் சம்பளம் கிடைத்தாலும் அதை புத்தகம் வாங்க ஒதுக்கி வைத்துவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இன்னும் நிறைய புத்தகங்களை தனது நண்பர்களுக்கு கொடுத்துவிட்டதாகவும் இல்லை என்றால் இதை விட அதிக புத்தகம் தன்னிடம் இருந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார் 

சமுத்திரகனியின் நூலக வீடியோ தற்போது சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவ்வளவு புத்தகத்தை சினிமாவில் இருக்கும் ஒருவர் படிக்க முடியுமா என்கிற அளவிற்கு புத்தகங்கள அடுக்கி வைத்துள்ளார் சமுத்திரகனி.

Continues below advertisement