நாய், பூனைகள் செய்யும் அழகான சேட்டைகளுக்கு எப்போதுமே ரசிகர் பட்டாளம் அதிகம். அப்படியான வீடியோக்கள் நிறைய அடிக்கடி தாறுமாறாக வைரல் ஆகி வரும். நாய் பூனைகளுக்கு குறிப்பாக எப்போதும் மனிதர்கள் உண்ணும் உணவின் மீது கண்கள் அதிகம். அவற்றை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் அவற்றிற்கு அதிகமாகவே இருக்கும். அதே போல தற்போது வைரல் ஆகி இருக்கும் இந்த வீடியோவில் ஒருவர் சாப்பிடும் பீட்சாவை ஒரு பூனை மன்றாடி கேட்கிறது.
இந்த விடியோ பீட்சாவை கையில் வைத்திருப்பவர் அவரது மொபைலில் எடுத்துள்ளார், அதில் மேலிருந்து கீழே நிற்கும் ஒரு அழகான கருப்பு நிற பூனை காட்டப்படுகிறது. அவரது கையில் உள்ள பீட்சாவும் ஓரமாக ஃபிரேமில் தெரிகிறது. அப்படி எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் அந்த பூனை இரு கால்களில் நின்றுகொண்டு இரு முன்னங்கால்களையும் கூப்பி கைபோல் பாவித்து முன்னும் பின்னும் அசைத்து கெஞ்சி அவர் கையில் வைத்திருக்கும் பீட்சாவை கேட்கிறது. இந்த வீடியோ கேட்ஸ் ஆஃப் இன்ஸடாகிராம் என்னும் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூனை பேசுவது போன்ற கேப்ஷன் அந்த விடியோவிற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், "எல்லோருக்கும் வணக்கம்! அனைத்து புதிய பாலோயர்ஸுக்கும் நன்றி! எல்லா புதிய நபர்களுக்கும் என்னை அறிமுகப்படுத்த இந்த நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்! என் பெயர் வார்ட்ஸ்வொர்த், வாடி என்று அழைப்பார்கள்! நான் எப்போதும் உணவுக்காக மன்றாட விரும்புகிறேன்! எனக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர், ஜாக்ஸ், கட்லர் மற்றும் மிஸ்டரி!"
இந்த விடியோ ஆன்லைனில் வெளியானதில் இருந்து இது வரை 1.6 பேர் பார்த்து ரசித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த வீடொயோவிற்கு கீழ் பல பூனை விரும்பிகள் அழகான கமெண்டுகளையும் இட்டு வருகின்றனர். அதிலும் பலர் அவர்களது நண்பர்களை டேக் செய்து அதே போல அவர்களது பூனையும் செய்வதாக நினைத்து பார்க்கிறார்கள். சிலர் அந்த பூனையை கெஞ்ச விடாதீரகள் பாவம், என்று கமென்ட் செய்துள்ளனர். ஒரு சிலர் சக உயிர் உணவுக்காக மன்றாடுவதை எப்படி க்யூட்டாக பார்க்க முடிகிறது என்றும் கொதித்துள்ளனர்.