நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் அவரை விமர்சித்துள்ள பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.


அரசியலில் களமிறங்கும் விஜய்


 நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க இருப்பது குறித்து சமீப காலங்களில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அறிவித்தார். “தமிழக வெற்றி கழகம்” என்று தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளார் விஜய். நடப்பு மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 2026ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார். 


வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்“ என்று விஜய் தன் நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


விஜய்யை விமர்சித்த கே.ராஜன்



விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு தரப்புகளிடம் இருந்து கருத்துகள் வெளிவருகின்றன. சிலர் விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்த்து கடுமையாகப் பேசிவருகிறார்கள். அதே நேரத்தில் சிலர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கவே செய்கிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன்  நடிகர் விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவில் கே.ராஜன் “ஏழை மக்களுக்கு உதவி செய்வோம் என சொல்கிறார்கள். ஆனால் உங்கள் படத்துக்கு  ரூ.1000க்கு டிக்கெட் விற்கிறார்கள். அரசு நிர்ணயித்த விலையை விற்க சொல்லுங்க. அதைவிட்டு விட்டு அரசியலில் வந்து என்ன பண்ணப் போகிறீர்கள்?


அதிக விலைக்கு டிக்கெட் விற்பதையே தடுக்க முடியல. பின்ன எதுக்கு ஓட்டுக்கு பணம் வாங்காதீங்கன்னு சொல்றீங்க. விஜய் நடிப்பை விட்டு அரசியலுக்கு போறதா சொல்றாங்க. பெரிய வயசு இல்ல, அதனாலே அவர் இன்னும் நடிக்க வேண்டும். விஜய் அவர் அரசியலில் இருக்க வேண்டுமா என்று மக்கள் சொல்லட்டும்” தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார். விஜய் தன் அரசியல் எண்ட்ரிக்கு அதிகாரப்பூர்வமாக அச்சாரமிட்டுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 




மேலும் படிக்க : Vijay Political Party: அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்! எப்போது போட்டி?


Vadakkupatti Ramasamy Review: நகைச்சுவையில் வென்றாரா வடக்குப்பட்டி ராமசாமி? முழு விமர்சனம் இதோ!