புறாவுக்கு டப்பிங் பேசிய மணிகண்டன்...வைரலாகும் வீடியோ
பல தமிழ் திரைப்படங்களில் டப்பிங் பேசியுள்ள மணிகண்டன் அனிமேஷ் படங்களில் மிருகங்களுக்கும் டப்பிங்க் பேசியுள்ளது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது

மணிகண்டன்
வளர்ந்து வரும் நடிகர்களில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் மணிகண்டன். டப்பிங் , மிமிக்ரி , திரைக்கதை ஆசிரியர் , இயக்குநர் , நடிகர் என எல்லாவற்றையும் கலந்துகட்டி அடித்து வருகிறார். மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்த்தன் திரைப்படம் தற்போது திரையரங்கில் வெற்றி நடை போட்டு வருகிறது. சமூக வலைதளம் பக்கம் போனாலே எல்லா யூடியூப் சேனல்களும் மணிகண்டனை வளைத்து வளைத்து பேட்டி எடுத்து வருகிறார்கள். பேட்டி மட்டுமில்லாமல் பல்வேறு நடிகர்கள் மாதிரி மிமிக்ரியும் செய்து காட்டி வருகிறார் மணிகண்டன். மேலும் தான் பணியாற்றிய சில படங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்
புறாவுக்கு டப்பிங் பேசிய மணிகண்டன்
அந்த வகையில் போல்ட் என்கிற எனிமேஷ் படத்தில் தான் மூன்று புறாக்களுக்கு டப்பிங் பேசிய தகவலை மணிகண்டன் பகிர்ந்து கொண்டார். மூன்று வெவ்வேறு புறாக்களுக்கு திருநெல்வேலி தமிழில் மணிகண்டன் டப்பிங் பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
குடும்பஸ்த்தன்
அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத்குமார் தயாரிப்பில், நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்திருக்கும் படம் குடும்பஸ்தன். சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், "ஜெய ஜெய ஜெய ஹே" புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். வைசாக் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.