தேவத்ர்ஷினி - சேதன்
தொலைக்காட்சித் தொடர்களில் தன் கரியரை தொடங்கியவர் நடிகை தேவதர்ஷினி. சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா காமெடி தொடர் இவருக்கு பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்த தேவதர்ஷினி 90 க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் இயக்கிய் காஞ்சனா திரைப்படம் இவரது கரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. நடிகர் மட்டுமில்லாமல் மனநல ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார் தேவதர்ஷினி
தேவதர்ஷினியின் கணவர் சேத்தனும் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கியவர்தான். அத்தி பூக்கள் , மர்மதேசன் , உதிரிப்பூக்கள் என 25 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். மெட்டி ஒலி தொடரில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. சினிமாவில் அவ்வப்போது சில கதாபாத்திரங்களில் நடித்தாலும் அண்மைக் காலங்களில் சேத்தனின் நடிப்பு பலரால் பாராட்டுக்களை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான விடுதலை 2 , மற்றும் ஜமா ஆகிய இரு படங்களில் மிகச் சிறந்த நடிப்பை சேத்தன் வெளிப்படுத்தி இருந்தார்.
போல் டான்ஸ் ஆடும் நியதி கடம்பி
தேவதர்ஷினி சேத்தனைத் தொடர்ந்து இவர்களின் மகள் நியதி கடம்பியும் தற்போது திரைத்துறையில் அடி எடுத்து வைத்துள்ளார். விஜய் சேதுபதியின் 96 படத்தில் தனது அம்மாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான தலைவெட்டியான் பாளையம் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். சமூக வலைதளத்தில் பயங்கர ஆக்டிவாக இருந்து வரும் நியதி கடம்பி போஸ் டான்ஸ் நடனக்கலைஞரும் கூட. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போல் டான்ஸ் ஆடும் வீடியோக்களை தொடர்ச்சியாக அப்லோட் செய்து வருகிறார்.
சமீபத்தில் கடற்கரையில் போல் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்திருந்தார். இந்த வீடியொ தற்போது வைரலாகி வருகிறது.