சன் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியை தொடங்கியவர் மணிமேகலை. பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியிருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவரை பிரபலம் ஆக்கியது. முதலில் கோமாளியாக வந்தவர் பின்பு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அளவிற்கு திறமையால் வளர்ந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது அதில் போட்டியாளராக வந்த விஜ பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கும் மணிமேகலைக்கும் பிரச்னை ஏற்பட்டது.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி
இதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விஜே மணிமேகலை விலகினார். பிறகு விஜய் டிவி தொடங்கும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க போவதில்லை என்ற அறிவிப்பை அவரே சமூகவலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மணிமேகலை விஜய் தொலைக்கைாட்சியை விட்டு வெளியேற பிரியங்கா தான் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் களமிறங்கினார் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியில் அவர் பாபா பாஸ்கர் மாஸ்டருடன் சேர்ந்து செய்யும் அலப்பறைகள், காமெடி காட்சிகளும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது.
மனம் திறந்து பேசிய மணிமேகலை
மணிமேகலை செய்யும் ரகளையை ரசிப்பதற்கே இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் காண தொடங்கினர். தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியை சோலோவாக தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் மணிமேகலை அளித்த பேட்டியில் பிரியங்கா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, "நான் 16 வருடங்களாக இந்த வேலையை செய்து வருகிறேன். இது என் மனதிற்கு பிடித்த வேலையாக இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியை விட்டு வந்த பின்பு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து அழைப்பு வந்தது.
பிரியங்கா முடிந்து போன சாப்டர்
இதற்கு முன்பு அங்கு நான் எந்த ஷோவையும் நடத்தியது இல்லை. கொஞ்சம் யோசித்தேன். ஒரு பெரிய பிரச்னைக்கு பிறகுந் அந்த வாய்ப்பு வந்த போது அது நன்றாக இருக்கும் என்று என் உள் மனது சொன்னது. நான் எப்போதும் என் உள் மனது சொல்வதை மன உறுதியுடன் ஏற்பேன். அப்படித்தான் ஜி தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு பல விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு அவருடன் பேச வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அவர் முடிந்து போன சாப்டர் என மணிமேகலை மனம் திறந்து பேசியுள்ளார்.