பாலிவுட் கடந்த சில வருடங்களாகவே நெப்போடிசம் பற்றி சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன இந்த நிலையில் விவேக் அக்னிஅக்னிஹோத்ரி அளித்த பதில் மேலும் சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றது.
நெப்போடிசம் என்றால் என்ன :
நெப்போடிசம் என்றால் திரைத் துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவரின் வாரிசு எந்தவித முயற்சியும் இன்றி எளிதாக வெற்றியை எட்டி விடுகின்றனர், ஆனால் புதிதாக தனது திரைத்துறை பணியை துவங்கும் இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை அனைத்தையும் ஏற்கனவே பிரபலமாக உள்ளவர்களின் வாரிசுகள் தட்டிப் பறித்துக் கொள்வதாக பாலிவுட்டில் சர்ச்சைகள் நிலவி வருகிறது இதை தான் என் நெப்போடிசம் என்கிறார்கள்.
விவேக் அக்னி அக்னிஹோத்ரி பிரபல இந்திய திரைப்பட இயக்குனர்.
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மூலம் அதீத சர்ச்சையில் சிக்கியவர். பல நேர்காணல்களில் சர்ச்சையான தகவல்களை பேசி பாலிவுட் வட்டாரத்தில் பிரபலமாக இருந்து வருபவர் இயக்குனர் அக்னி அக்னிஹோத்ரி.
தற்போது ஒரு நேர்காணலில் கேட்ட கேள்வியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்கள் நெப்போடிசம் பற்றி கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதில் " 2000திற்கு முன்னால் எல்லாம் நிப்போட்டிஸம் பாலிவுட்டில் கிடையாது ஆனால் தற்போது ஒரு மாபியா கும்பல் போல அதை செயல்படுத்தி வருகின்றனர் இங்கு இருப்பவர்கள் இது பாலிவுட்டின் வளர்ச்சியை முற்றிலுமாக குறைக்கிறது" என்று அதன் நேர்காணலில் பதிலளித்துள்ளார் விவேக் கோத்ரா.