சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ கதைச் சுருக்கம் வெளியாகியுள்ளது. இதன்மூலம் படத்தின் மையக்கரு குறித்து ரசிகர்களுக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இதுவரை படத்தின் கதைக்களம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள சுருக்கம் படத்தின் உணர்வுப்பூர்வமான கதையை வெளிப்படுத்தியுள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை
படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, 'விஸ்வநாத் & சன்ஸ்' உருவாகியுள்ளது. படத்தின் நாயகன் முன்னாள் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் வீரர். விளையாட்டு வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்த அவர், தனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் சூழலில் கதை நகர்கிறது.
அதிகாரப்பூர்வ கதைச் சுருக்கத்தில் கூறப்பட்டிருப்பதன்படி, வாடகைத் தாய் (Surrogate Mother) மூலம் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் முன்னாள் ஒலிம்பிக் வீரரின் வாழ்க்கை, எதிர்பாராத திருப்பத்தை சந்திக்கிறது. அவர் பெற்ற குழந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தனது குழந்தையை சுமந்து பெற்றெடுத்த வாடகைத் தாயுடன் அவர் உணர்வுப்பூர்வமாக நெருக்கமாகும் சூழல் உருவாகிறது. இந்த உணர்வுப்பூர்வமான உறவை மையமாகக் கொண்டே படத்தின் திரைக்கதை நகரும் என்று அதிகாரப்பூர்வ சுருக்கம் தெரிவிக்கிறது.
'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் மமிதா பைஜு, ரவீனா டண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இசையை ஜி வி பிரகாஷ் அமைத்துள்ள நிலையில், சிதாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவும், படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ கதைச் சுருக்கம், 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம்சூர்யாரசிகர்களிடையேமிகப்பெரியஎதிர்பார்ப்பைஉருவாக்கியுள்ளது
