தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடியதால் மாபெரும் வெற்றி பெற்றது.  இந்த திரைப்படத்தை இயக்குனர் செல்ல அய்யாவு இயக்கியிருப்பார்.

Continues below advertisement

கட்டா குஸ்தி 2 நாளை ரிலீஸ்:

இந்த நிலையில், இந்த படத்தின் 2ம் பாகமாக கட்டா குஸ்தி 2 தயாராகியது. இதன் பாடல்கள், ட்ரெயிலர் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில், கட்டா குஸ்தி 2 நாளை உலகெங்கும் ரிலீசாகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

கட்டா குஸ்தி 2ம் பாகத்தை வேல்ஸ் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து  தயாரித்துள்ளனர்.

Continues below advertisement

நட்சத்திர பட்டாளம்:

கட்டா குஸ்தி படத்தின் முதல் பாகத்தில் தன்னை கட்டப்பஞ்சாயத்து செய்வது போல காட்டிக் கொள்ளும் இளைஞருக்கும், அவரது மல்யுத்த வீராங்கனை மனைவிக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் திரைக்கதையாக ரசிக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. இதில் நகைச்சுவை, மல்யுத்தம், சென்டிமென்ட் என குடும்பங்கள் ரசிக்கும் வகையில் திரைக்கதை இருந்ததால் படம் வெற்றி பெற்றது.

முதல் பாகத்தில் நடித்த முனிஷ்காந்த், கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவரும் இதே பாகத்திலும் நடித்துள்ளனர். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி இந்த பாகத்திலும் நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட் ஆகியோருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு முக்கிய  நடிக்கின்றனர். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் விநியோகம் செய்கிறது. 

இ்ந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி தாயான பிறகு அவர் மீண்டும் மல்யுத்தத்தில் சாதிக்க போராடுவதையும், விஷ்ணுவிஷால் ஒரு கணவனாக குடும்பத்தை எப்படி பார்த்துக்கொள்கிறார்? இவர்கள் நடக்கும் திருப்பம் என்ன என்பதை நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இந்த படத்தின் திரைக்கதையில் கூறியிருக்கிறார்கள். 

மிகுந்த எதிர்பார்ப்பு:

முதல் பாகத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த நிலலையில், இரண்டம் பாகத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இவரது இசையில் சம்பவக்காரி பாடல் வெளியாகி ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார். 

நாளை உலகெங்கும் வெளியாக உள்ள இந்த இரண்டாம் பாகம் கட்டா குஸ்தி முதல் பாகம் போல வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.